states

img

சாலையோர குடிசைக்குள் கார் புகுந்து விபத்து: 4 பெண்கள் பலி  

தெலுங்கானாவில் சாலை ஓரத்தில் இருந்த குடிசைக்குள், கார் புகுந்து விபத்துக்குள்ளானதில் 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.  

தெலுங்கானா மாநிலம் கரீம் நகரின் புறநகர் பகுதியில் சாலையோரத்தில் கூலி தொழிலாளி குடும்பத்தினர் குடிசை வீடு அமைத்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலையில் வேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து குடிசை வீட்டுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.  

இந்த விபத்தில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 4 பெண்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.  இந்த சம்பவம் அறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  

அதனைதொடர்ந்து விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி தப்பியோடிய 4 இளைஞர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.