states

தீக்கதிர் விரைவு செய்திகள்

பாஜக முதல்வர் பேச்சால் மணிப்பூரில் மீண்டும் வன்முறை பதற்றம் மலைப்பகுதிகளில் படைகள் குவிப்பு

மணிப்பூர் பாஜக முதல்வர் பைரேன் சிங் புத்தாண்டை முன்னிட்டு கடந்த டிசம்பர் 31ஆம் தேதி மன்னிப்பு கோரினார். பைரேன் சிங்  பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனவரி  1ஆம் தேதி புத்தாண்டு தினத்தில்  காங்போக்பி உள்ளிட்ட பகுதிகளில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை யில் பலர் படுகாயமடைந்தனர். பைரேன் சிங் குதர்க்கம் இந்நிலையில், வெள்ளிக்கிழமை அன்று செய்தியாளர்கள் சந்திப்பில், “மணிப்பூர் இனக்கலவரம் விஷயத்தில் நான் மன்னிப்பு கோரியதை அரசியலாக்கு பவர்கள், மணிப்பூரின் அமைதியை விரும்பாதவர்கள்” என பேசினார்.  இதுகுறித்து அவர் மேலும் கூறுகை யில், “மணிப்பூர் மாநிலம் அமைதியின்றி இருக்க வேண்டும் என்று நினைப்ப வர்களே நான் மன்னிப்புக் கோரியதை அரசியலாக்கி வருகின்றனர். வன்முறை யால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்கள் ஆகியோரிடமே நான் மன்னிப்புக் கோரினேன். பயங்கரவாதிகளிடம் நான் ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும்? “மணிப்பூர் பாஜக முதல்வர் பைரேன் சிங் என பயங்கரவாதிகள் எனக் கூறியது எங்களைத் தான்” என குக்கி பழங்குடி மக்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர். இதனால் காங்போக்பி மற்றும் மலைப்பகுதிகளில் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக செய்தி கள் வெளியாகியுள்ளன.

சபரிமலையில்  ரூ.297 கோடி வருமானம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 48 நாள் கொண்ட மண்டல பூஜை காலத்தில் ரூ.297 கோடி வரு மானம் கிடைத்துள்ள தாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “மண்டல பூஜை காலத்தில் 32.49 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும் இந்த கால கட்டத்தில் சபரிமலை கோவிலுக்கு ரூ.297 கோடி வருமானம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.214.82 கோடி வருவாய் கிடைத்துள்ள நிலையில், இவ்வாண்டு கூடுதலாக ரூ.82.23 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அரவண பிரசாத விற் பனை மூலம்தான் அதிகமாக ரூ.124 கோடி கிடைத்துள்ளது. காணிக்கை மூலம் ரூ.80.25 கோடி கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.13.24 கோடி அதிகமாகும்” என அவர் கூறியுள்ளார்.

உக்ரைன் வழியாக ஐரோப்பாவுக்கு இயற்கை எரிவாயு அனுப்புவது நிறுத்தம்  ரஷ்யா அறிவிப்பு

மாஸ்கோ நேரப்படி ஜனவரி முதல் நாள் காலை 8 மணி முதல் உக்ரைன் வழியாக ஐரோப்பாவுக்கு இயற்கை எரிவாயுவை அனுப்புவதை நிறுத்துவதாக ரஷ்ய இயற்கை எரிவாயு தொழில் துறை நிறுவனம் அன்று வெளியிட்ட அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டது. உக்ரைனின் வழியாக ஐரோப்பாவுக்கு ரஷ்யாவின் இயற்கை எரிவாயுவை அனுப்புவது பற்றிய உடன்படிக்கையை நீட்டிப் பதை உக்ரைன் பலமுறை தெளிவாக மறுத்ததால், சட்டம் மற்றும் தொழில் நுட்பம் ரீதியில் உக்ரைன் வழியாக ஐரோப்பாவுக்கு இயற்கை எரிவாயுவை அனுப்ப முடியாது என்று இவ்வறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ரஷ்ய இயற்கை எரிவாயு தொழில் துறை நிறுவனம், உர்பைன் பெட்ரோலியா மற்றும் இயற்கை எரிவாயு கூட்டு நிறுவனத்துடன் இணைந்து, உக்ரை னின் உரிமைப் பிரதேசத்தின் வழியாக இயற்கை எரிவாயு அனுப் புவது பற்றிய உடன்படிக்கையை கையொப்பமிட்டது. இவ்வுடன்ப டிக்கை அமலாக்கப்படும் காலம் 5 ஆண்டுகளாகும். 2024 ஆம் ஆண்டின் டிசம்பர் 31ஆம் நாள் இது காலாவதியானது. ரஷ்யாவுடன் இந்த உடன்படிக்கையை நீட்டிக்காது என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கீ அண்மையில் தெரிவித்தார். எரியாற்றல் வினியோகத்தின் மீதான, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி முதலிய ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் கவலையை இது எழுப்பியுள்ளது.