வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை ஓராண்டுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பாக கொண்டாட இருக்கிறது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பு.
1924 ஆம் ஆண்டு நடைபெற்ற வைக்கம் போராட்டம் இதில் பெரியார் உட்பட தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த பல தலைவர்கள் பங்கு பெற்றனர் இந்த போராட்டம் தீண்டாமையை எதிர்த்தும், கோயில் நுழைவிற்காகவும் 603 நாட்கள் நடைபெற்றது. இதன்மூலம் பெரியாருக்கு வைக்கம் வீரர் என்ற பெயரும் வழங்கப்பட்டது.
வைக்கம் போராட்டத்தின் நூறாவது ஆண்டினை சிறப்பிக்கும் விதாமாக கேரள அரசு 603 நாட்கள் கொண்டாட முடிவு செய்திருந்தது தற்போது தமிழ்நாட்டிலும் இன்று முதல் ஓராண்டுக்கு அப்போராட்டத்தின் நோக்கம், கிடைத்த வெற்றி குறித்து மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.