states

img

செப்டம்பர் 15 முதல் காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கம்!

தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில், 1 முதல் 5-ஆம் வகுப்பு  மாணவர்களுக்குக் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15-ஆம் முதல் தொடங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமப்புறங்களில் உள்ள 1,545 பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. இதன்மூலமாக 1.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். இத்திட்டத்தை அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ஆம் தேதி அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் தொடங்கிவைக்கிறார். மதுரை மாநகராட்சியில் உள்ள 26 தொடக்கப் பள்ளிகளில் 4,388 மாணவர்களுக்குச் சிற்றுண்டி வழங்கி தொடங்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து, படிப்படியாக தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது.