பிப். 10-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
சென்னை, பிப். 3 - முதல்வர் மு.க. ஸ்டா லின் தலைமையில் பிப்ரவரி 10 அன்று தமிழக அமைச் சரவை கூட்டம் நடைபெற வுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் தமிழக பட் ஜெட் கூட்டத்தொடரை நடத் துவது குறித்து விவாதிக்கப்பட உள் ளது. இந்தாண்டின் முதல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஜனவரி 6-ஆம் தேதி கூடியது. இந்த கூட்டத் தொடரில், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட தற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேசிய கீதத்தைத் தான் இரண்டு முறை இசைக்க வேண்டும் என்றும் ஒன்றுக் கும் ஆகாத ஒரு காரணத்தை காட்டி, அரசு தயாரித்தளித்த உரையை வாசிக்காமலேயே ஆளுநர் வெளியேறினார். எனினும், ஜனவரி 11 வரை கூட்டம் நடைபெற்று பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: பிரச்சாரம் ஓய்ந்தது
ஈரோடு, பிப். 3 - ஈரோடு கிழக்கு சட்ட மன்றத்தொகுதி இடைத் தேர்தல் பிரச்சாரம் திங்கள் கிழமை (பிப்ரவரி 3) மாலை யுடன் நிறைவு பெற்றது. நிறைவு நாளில், திமுக வேட்பாளர் வி.சி. சந்திர குமாரை ஆதரித்து அமைச்சர் சு. முத்துசாமி தலைமையில் திமுகவினர் விறுவிறுப்பான இறுதிக் கட்ட பிரச்சாரத்தை மேற் கொண்டனர். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கட்சி கள் இத்தேர்தலில் போட்டி யிடவில்லை. சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு வழி விடும் வகையில், இந்தக் கட்சிகள் ஒதுங்கிக் கொண்ட நிலையில், அங்கீ கரிக்கப்பட்ட கட்சி என்ற வகையில் நாம் தமிழரும், சுயேட்சைகள் உட்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பிப்ரவரி 5-ஆம் தேதி 237 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 2.27 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.
இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு
புதுதில்லி, பிப். 3 - அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 87 ரூபாய் 29 காசுகள் என்ற அளவிற்கு கடும் சரிவைக்கண்டுள்ளது. ஏற்கெனவே, பண வீக்கம், விலைவாசி உயர்வு, வேலையின்மை, ஏற்றுமதி வர்த்தகத்தில் ஏற்பட்ட பாதிப்பு ஆகிய காரணங் களால், இந்தியப் பொருளா தாரம் சிக்கலில் இருந்து வந்தது. இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவி யேற்ற பிறகு, சட்டவிரோத குடியேற்றத்துக்குத் தடை, விசா கட்டுப்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற் கொண்டதன் காரணமாக, டாலர் மதிப்பு அதிகரிக்கத் துவங்கியதுடன், இந்திய ரூபாய் மதிப்பும் மேலும் சரி யத் துவங்கியது. இந்நிலை யிலேயே, அமெரிக்க டால ருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு, திங்க ளன்று மட்டும் 29 காசுகள் சரிந்ததுள்ளது.
ஜகபர் அலி கொலை வழக்கு
குற்றம்சாட்டப்பட்ட 5 பேரை 3 நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி
புதுக்கோட்டை, பிப்.3 - சமூக ஆர்வலர் ஜகபர்அலி கொலை வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து 3 நாட்கள் விசாரணை நடத்த நீதித்துறை நடுவர் சி.பாரதி உத்தரவிட்டார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வெங்களூரைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் ஜகபர்அலி. இவர் இந்தப் பகுதியில் நடைபெ றும் கனிமவளக் கொள்ளை குறித்து தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார். இதனால் கடந்த ஜன. 17 அன்று ஜகபர்அலி டிப்பர் லாரி ஏற்றிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த குவாரி உரிமையாளர்கள் உள்பட 4 பேர் போலீ சாரால் கைது செய்யப்பட்டனர். ஒருவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இந்த 5 பேரும் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள னர். வழக்கு விசாரணை திருமயம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் இருந்து புதுக்கோட்டை குற்ற வியல் நடுவர் மன்றம்-1-க்கு மாற்றப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப் பட்டிருந்த ஆர்.ஆர். கிரஷர்ஸ் உரிமையா ளர்கள் ராசு (54), ராமையா (55), முருகானந்தம் (56), காசிநாதன் (45), தினேஷ் (24) ஆகிய 5 பேரும் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் திங்கள் கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். அதேநேரத் தில், காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி தரப்பில் மனுவும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதித்துறை நடுவர் சி.பாரதி, குற்றம்சாட்டப்பட்டுள்ள 5 பேரிடமும் 3 நாள் விசாரணை மேற்கொள்ள போலீஸ் காவல் வழங்கி திங்கள்கிழமை உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சிபிசிஐடி ஆய்வாளர் புவனேஸ்வரி தலைமையிலான போலீசார், அவர்கள் 5 பேரையும் பாதுகாப்புடன் அழைத் துச் சென்றனர். வியாழக்கிழமை (பிப்.6) மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
விஜயபாஸ்கர் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை பிப்.10-க்கு ஒத்திவைப்பு
புதுக்கோட்டை, பிப்.3 - புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர் சி.விஜயபாஸ்கர். இவர், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச் சராக இருந்தார். அந்தக் காலக் கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 35.79 கோடி சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் திங்களன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையை பிப்.10 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி வி. வெங்கடேச பெருமாள் உத்தரவிட்டார்.