states

img

இன்சூரன்சில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு ஆபத்தானது

புதுதில்லி, பிப். 3 - இன்சூரன்ஸ் துறையில் 100 சத விகிதம் அந்நிய நேரடி முதலீட்டை அனு மதிக்கும் முடிவானது, இந்தியாவின் விலைமதிப்பற்ற வளங்களை சூறை யாடுவதற்கு வழிவகுக்கும் என்பது டன், மக்கள் நலனுக்கு எதிரான- கடு மையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழி யர் சங்கம் (AIIEA) எச்சரிக்கை விடுத்துள்ளது.  இதுதொடர்பாக, சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஒன்றிய அரசின் முடிவு கண்டிக்கத்தக்கது

ஒன்றிய அரசின் 2025-26 நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும் போது,  இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்புகளை தற்போ தைய 74 சதவிகிதத்தில் இருந்து 100  சதவிகிதமாக உயர்த்துவதாக நிதி யமைச்சர் அறிவித்துள்ளார். இந்த முடிவு தேவையற்றது; ஏனெனில் இது இந்தியா வின் விலைமதிப்பற்ற வளங்களை நம் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்காகத் திரட்டுவதற்கும், குடிமக்களுக்கான அர சாகத் தனது கடமையை நிறைவேற்று வதற்கும் எதிராக, கடுமையான விளைவு களை ஏற்படுத்தும்.  நாங்கள், (அகில இந்திய இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்கம் - AIIEA) இந்த  முடிவைக் கண்டிக்கிறோம்; மேலும், இந்த நடவடிக்கைக்கு எதிராகப் பொது மக்களின் கருத்தைத் திரட்டும் பணியில் சங்கம் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும்.

அவசியமே இல்லாத நடவடிக்கை

ஐ.ஆர்.டி.ஏ. மசோதா, 1999 நிறை வேற்றப்பட்டதன் மூலம் தேசியமய மாக்கப்பட்ட இன்சூரன்ஸ் துறை தனி யாருக்குத் திறந்து விடப்பட்டது. இன்சூ ரன்ஸ் துறையில், இந்தியத் தனியார் மூலதனம் வெளிநாட்டு நிறுவனங்களு டன் இணைந்து செயல்பட இச்சட்டம் அனுமதித்தது.  அப்போது அதிகபட்சம் 26 சதவிகிதம் எனக் கட்டுப்படுத்தப்பட்டிருந்த அந்நிய நேரடி முதலீடு, பின்னர் 74 சதவிகிதம் வரை படிப்படியாக உயர்த்தப்பட்டது.  ஆயுள் மற்றும் பொது இன்சூரன்ஸ் துறையில், ஏராளமான தனியார் இன்சூ ரன்ஸ் நிறுவனங்கள், வெளிநாட்டு நிறு வனங்களுடன் கூட்டாகச் செயல்பட்டு வருகின்றன. தங்கள் வணிகங்களை நடத்துவதற்கான மூலதனம் என்பது, இந்த நிறுவனங்களுக்கு ஒருபோதும் பிரச்சனையாக இருந்ததில்லை; ஏனெ னில் அவை முன்னணி பன்னாட்டு நிறு வனங்களுடன் கூட்டுச் சேர்ந்த பெரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சொந்த மானவை. ஆனால், ஒரே ஒரு நிறு வனத்தைத் தவிர வேறெந்த இன்சூரன்ஸ் நிறுவனமும் 74 சதவிகித அந்நிய  நேரடி முதலீட்டு வரம்பை மீறக்கூடிய நிலைக்கு அருகில்கூட இல்லை. உண்மையில், இன்சூரன்ஸ் துறையில் முதலீடு செய்யப்பட்டுள்ள மொத்த மூலதனத்தில், அந்நிய நேரடி முதலீடு சுமார் 32 சதவிகிதம் மட்டுமே. 

முறைகேடான பேரங்கள் அரங்கேறவே வழிவகுக்கும்

நிலைமை இவ்வாறிருக்க, அந்நிய மூலதனத்தை இந்தியாவிற்குள் முழு சுதந்திரத்துடன் இயங்குவதற்கு அனு மதி வழங்கும் வகையிலான, இந்த நட வடிக்கையை அரசு ஏன் எடுத்துள்ளது என்பது ஆச்சரியமாக உள்ளது. இந்த நடவடிக்கை, தற்போது பங்குதாரராக செயல்படும் வெளிநாட்டு நிறுவனம், தனி நிறுவனம் தொடங்கு வதற்காகக் கூட்டாகச் செயல்படும் நிறுவனத்திலிருந்து விலக முடிவு செய்தால், அது இந்தியாவில் செயல் படும் உள்நாட்டு நிறுவனங்களுக்கும் இந்தியப் பொருளாதாரத்திற்கும் கடு மையான பின்விளைவுகளை ஏற் படுத்தும். ஏற்கெனவே இயங்கிவரும் நிறுவனங்களைக்  கையகப்படுத்துவத ற்காக, முறைகேடான பேரங்கள் நடக்க வும் வாய்ப்புகள் உள்ளன. அந்நிய மூலதனத்தை முழுமையான சுதந்திரத்துடன் (மக்களின் சேமிப்பை) அதிகமாக அணுக அனுமதிப்பது, மக்க ளுக்கும் வணிகத்திற்கும் முக்கியத் தேவையான பாதுகாப்பை வழங்காது; மாறாக, லாபத்திற்கு அதிக முக்கி யத்துவம் தந்து, இன்சூரன்ஸ் துறையின் முறையான வளர்ச்சியைத் தடுக்கும் என்பதை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் உறுதியாகப் புரிந்துகொண்டுள்ளது. இது நம் சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் நலன்களுக்கு எதிராகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். 

அந்நிய மூலதனமானது உள்நாட்டு சேமிப்புக்கு மாற்றாகாது

மேலும், வெளிநாட்டு மூலதனம் உள்நாட்டு சேமிப்பிற்கு மாற்றாக இருக்கவே முடியாது. எனவே, உள்நாட்டுச் சேமிப்பை அந்நிய மூலதனத்திடம் ஒப்படைப்பது பொரு ளாதார அல்லது சமூக முன்னேற்றத்திற்கு ஒருபோதும் உதவாது. இந்தியா மக்கள் நலத்திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கும் ஒரு நாடு என்ற அடிப்படையில், அரசு அதன் அனைத்துக் குடிமக்களுக்கும் பயனளிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கான சேமிப்பின் மீது கட்டாயம் அதிகக் கட்டுப் பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். அரசு, தற்போதுள்ள இன்சூரன்ஸ் சட்டங்களில் திருத்தங்கள் செய்து ஒருங்கி ணைந்த ஒரு சட்டத்தைக் கொண்டு வர  உத்தேசித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திருத்தங்கள் ஆயுள் இன்சூரன்ஸ் வணிகத்தை தேசிய மயமாக்க வேண்டிய கட்டாயத்தை அரசுக்கு ஏற்படுத்திய, 1956-க்கு முந்தைய நிலைமைக்கு நாட்டை மீண்டும் கொண்டு செல்லும்; அந்த அனுபவங்களின் அடிப்ப டையிலேயே அரசு, நிதிமுதலாளிகளின் கட்டுப் பாட்டின் கீழ் இன்சூரன்ஸ் அனுமதிக்கப் படக்கூடாது என்று எச்சரிக்கை அடைந்தது. ஆனால், தற்போதைய அரசு நிதி முதலாளிகள் மற்றும் வங்கித்துறை முத லாளிகள் வசம் தற்போது இன்சூரன்ஸ் துறையை ஒப்படைத்து, மக்களின் சேமிப்பி ற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கிறது.

கார்ப்பரேட் மீதான அக்கறையை மக்கள் பக்கம் திருப்புக!

பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப் பது என்ற பெயரால், மக்களில் ஒரு சிறு பிரி வினரின் மீது நிதிநிலை அறிக்கை கவனம் செலுத்தும் அதே வேளையில், பெருவாரி யான மக்களின் நலன்களைப் புறக்கணிப்பது கண்டிக்கத்தக்கது. அரசு, கார்ப்பரேட் பெரு முதலாளிகள் மீது நியாயமான வரியைக் கூட விதிக்க மறுக்கிறது. கார்ப்பரேட் முத லாளிகளின் லாபம் அபரிமிதமாகப் பெருகி வரும் நிலையில், தொழிலாளர்களின் ஊதியம் தேக்கமடைந்து வருவதை பொரு ளாதார ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. தொழிலாளர்கள் தங்கள் வாழ்நிலையை மேம்படுத்துவதற்கு உதவும் வகையில் நிதிநிலை அறிக்கை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இன்சூரன்ஸ் சட்டம் 1938, எல்.ஐ.சி. சட்டம்  1956 மற்றும் ஐ.ஆர்.டி.ஏ. சட்டம் 1999  ஆகிய சட்டங்களைத் திருத்தும் பிற்போக்குத் தனமான முன்மொழிவுக்கு எதிராக அரசை சங்கம் எச்சரிக்கிறது. கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சாதகமான நிலையி லிருந்து விலகி மக்கள் நலனை மைய மாகக் கொண்டதாக பொருளாதாரக் கொள்கை களை மாற்றியமைக்க வலியுறுத்துகிறது. கார்ப்பரேட் துறையின் லாபத்தை விட,  மக் களின் நலன்களுக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்து கிறது.  இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட்டுஉள்ளது. இதனிடையே ஒன்றிய அரசின் முடிவைக் கண்டித்து இன்சூரன்ஸ் ஊழியர்கள் செவ்வாயன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.