- தில்லி மீண்டும் காற்று மாசுபட்டால் வழக்கம் போல திணறி வருகிறது. காற்று மாசுபாட்டின் சுகாதார விளைவுகளை ஆராய்ந்து காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம், 1981-ஐ மீண்டும் அமல்படுத்த வேண்டிய நேரம் இது. ஆனால் ஒன்றிய அரசு வழக்கம் போல அமைதி காத்து வருகிறது. - காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்
- மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையில் மாற்றம் தொடர்பான திட்டத்தின் வரையறை மாற்றியமைக்கப்பட வேண்டும். ஆந்திரப்பிரதேசம் அதன் அரசியல் முக்கியத்துவத்தை இழக்க தயாராக இல்லை. நாட்டிற்காக மக்கள் தொகையை கட்டுக்குள் கொண்டு வந்தோம் என்பதற்கான தண்டனையாகவே, இந்த திட்டத்தை நாங்கள் உணருகிறோம்.- தெலுங்கு தேசம் எம்.பி., கிருஷ்ணா தேவராயலு
- தேசியவாத காங்கிரஸ் (அஜித்) மூத்த தலைவர் நவாப் மாலிக்கிற்காக பிரச்சாரம் செய்ய மாட்டோம் என்றும், ஆனால் அவரது வேட்புமனுவை எதிர்க்க மாட்டோம் என்றும் பாஜக மாநில தலைவர் ஆஷிஷ் ஷெலர் கூறியுள்ளார். பாசாங்குத்தனம் ,மிகுந்த பொய்களின் கட்சி பாஜக என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. - சிவசேனா (உத்தவ்) எம்.பி., பிரியங்கா சதுர்வேதி
- உமர் காலித் உள்ளிட்டவர்களுக்கு பிணை வழங்காமல் இழுத்தடித்த வரலாற்றின் மிகவும் அநீதியான கருப்பு நாட்களுக்கு சொந்தக்காரர் முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட். - ஊடகவியலாளர் ரோகினி சிங்