சென்னை,ஜூலை 2- தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைக்கு எதிராக தொடர்ந்து பேசுகின்ற கர்நாடக துணை முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார். அப்போது பெண்ணையாற்று பிரச்சனையில் தீர்ப்பா யம் அமைப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள் ளார்.
இந்தப் போக்கு கடும் கண்டனத் திற்குரியதாகும். தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக மேட்டூர் அணைக் கான நீர்வரத்து சனிக்கிழமையன்று காலை விநாடிக்கு 121 கனஅடியாக இருந்தது, ஒரே நாளில் 117 அடியாக சரிந்தது. இதனால் அணையின் நீர் இருப்பும் குறைகிறது. இந்த நிலையில் கர்நாடகத்தில் இருந்து கூடுதலான நீரை பெற வேண்டிய நிலை எழுந்துள்ளது. இப்படியான உடனடி பிரச்சனைகள் உள்ள சூழலில், ஏற்கனவே நீதிமன்றத்தால் தீர்க்கப்பட்ட பிரச்சனை களை புதிதாக குழப்பும் முயற்சியை கர்நாடக அரசாங்கம் தொடர்கிறது. காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக எந்தவொரு கட்டுமானத்தை உருவாக்கவும் தமிழ்நாட்டின் அனுமதியைப் பெற வேண்டும். ஆனால், மேகதாது பகுதியில் அணை கட்டுவோம் என்று கர்நாடக அரசு தன்னிச்சையாக கூறிவந்தது. முன்பு, பாஜக ஆட்சியில் மேகதாது பகுதியில் அணை கட்டு வதற்காக பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டதுடன், அணை கட்டுமானப் பணிக்கு ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பில் திட்டமிடப் பட்டு ரூ.1000 கோடி ஒதுக்கீடும் செய்யப் பட்டது. மேலும், டி.பி.ஆர் அறிக்கை தயாரிக்க நீர்வளக்குழு அனுமதியளித்தது.
பெண்ணையாறு பிரச்சனை
தற்போது கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், துணை முதல்வரும் நீர்ப்பாசன அமைச்சருமான டி.கே.சிவக்குமார் மேகதாது பகுதியில் அணை ஏற்படுத்துவதில் தீவிரம் காட்டுகிறார். கீழ்மடை பாசன மாநிலமான தமிழ்நாட்டின் அனுமதியை பெறாமலே, குழப்பமான கருத்துக்களை முன்வைத்து நாட்டு மக்களை திசைதிருப்புகிறார். அண்மையில் இது தொடர்பாக ஒன்றிய நீர்வளத்துறை அமைச்ச ரை சந்தித்த டி.கே.சிவக்குமார், மேகதாது அணைக்கு ஒன்றிய அரசின் அனுமதியை கோரியிருப்பதுடன், பெண்ணையாற்றுப் பிரச்சனையில் தீர்ப்பாயம் ஏற்படுத்து வதையும் எதிர்த்திருக்கிறார். ஏற்கனவே நீதிமன்றத்தில் உள்ள பிரச்சனைகளில், அமைச்சர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் உண்மைக்கு நேர் எதிராக அமைந்துள்ளன. காவிரியில் உரிய நீரை உடனடியாக திறந்துவிட தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். கர்நாடக அரசின் தன்னிச்சை யான போக்கினை ஒன்றிய அரசாங்கம் கண்டிப்பதுடன், இனியேனும் இப்பிரச்ச னையை குறுகிய அரசியல் நோக்கங்களு க்கு அப்பாற்பட்டு அணுக வேண்டும். தமிழ்நாட்டின் நியாயமான நீர் பங்கீட்டு உரிமையை ஏற்பதுடன், புதிய குழப்பங் களுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் எனவும் மேகதாது பகுதியில் அணை ஏற்படுத்துவதற்கான எந்த அனுமதியையும் ஒன்றிய அரசு வழங்கக் கூடாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.