அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம்
சென்னை, ஜூலை 19 - திருவள்ளூரில் 8 வயதுக் குழந்தையைக் கடத்தி பாலியல் வல்லுறவு முயற்சியில் ஈடுபட்ட குற்ற வாளிகளை உடனடியாக கைது செய்து, சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மாதர் சங்கத் தின் மாநிலத் தலைவர் எஸ். வாலண் டினா, பொதுச்செயலாளர் அ. ராதிகா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப் பூண்டி அருகே உள்ள ஆரம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி யில் 4-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி கடந்த ஜூலை 12-ஆம் தேதி பள்ளி யில் இருந்து வீடு திரும்பும் வழியில் சில சமூக விரோதிகளால் கடத்தப் பட்டுள்ளார். மேலும் அக்குழந்தை மீது பாலி யல் வன்கொடுமைக்கான முயற்சி நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. குழந்தை, தான் கடத்தப்படும் போது கடத்தல்காரர்களிடமிருந்து தப்பிப்பதற்காக கடத்தல்காரர் களின் கண்களில் மண்ணை அள்ளி வீசி இருக்கிறது. இதனால் ஆத்திர மடைந்த சமூக விரோதிகள் குழந்தையை தாக்கி வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளனர். அவர்களிட மிருந்து குழந்தை கடுமையான காயங்களுடன் தப்பித்து தன் வீட்டுக் குச் சென்று விட்டது. தற்போது கடு மையான காயங்களுடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.
14.5.25 அன்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திரு வள்ளூர் மாவட்டச் செயலாளர் பத்மா தலைமையில் ஒரு குழு பாதிக்கப்பட்ட குழந்தையின் உற வினர்களைச் சந்தித்து, நடந்த விவரங்களை கேட்டறிந்தனர். பள்ளிச் சிறுமிக்கு நடந்த இத்த கைய வன்கொடுமையை அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும், போக்சோ மற்றும் பாலி யல் பலாத்காரம் முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில், காவல்துறை வழக்குப் பதிவு செய்து 7 நாட்கள் ஆகியும் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. குழந்தை கடத்தப்பட்டுள்ள நிலையில், கடத்தல் உள்ளிட்ட பிரிவு களிலும் இதில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்து கிறது. குற்றவாளிகள் யாராக இருந்தா லும் உடனடியாக கைது செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் காவல்துறையை கேட்டுக் கொள்கிறது. அத்துடன், கிராமப்புற பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட வேண்டும் எனவும், படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் அக்குழந்தைக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப் பிடப்பட்டு உள்ளது.