ராஜஸ்தானில் பேருந்தின் கூரையின் மீது பயணம் செய்த 3 பேர் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளனர்.
ராஜஸ்தானில் திருவிழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக பேருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டன. பேருந்து முழுவதும் ஆட்கள் நிரம்பியதும், சிலர் பேருந்தின் மேற்கூரை மீது ஏறி அமர்ந்து பயணம் செய்தனர். அப்போது ஜெய்சல்மர் நகரில் போல்ஜி என்ற பகுதியருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது, மேற்கூரையின் மீது அமர்ந்தவர்கள் மீது மின்சாரம் தாக்கியுள்ளது.
இதில் 3 பேர் மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து மீட்கப்பட்ட 5 பேரில் ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், 4 பேருக்கு சிகிச்சை அளித்து வருவதாக டாக்டர் வி.கே. வர்மா கூறியுள்ளார்.