புதுச்சேரி, மார்ச். 13- பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப் படுத்துவதில் ஒன்றிய மாநில அரசுகள் தவறியுள்ளது சுதா சுந்தரராமன் குற்றச்சாட்டு. "புதுமைப் பெண்களாய் புறப்படுவோம், புதுச் சேரியை காப்போம்" என்ற முழக்கத்தோடு புதுச்சேரியில் 111 வது சர்வதேச உலகமகளிர் தின விழா அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன அலுவலகத்தில் நடை பெற்றது. இவ்விழாவிற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பிரதேச தலைவர் இளவரசி, மக ளிர் பாதுகாப்பு இயக்க த்தின் இயக்குனர் ஆலிஸ் தாமஸ்,சமம் பெண்கள் சுயசார்பு இயக்கத்தின் பொதுச் செயலாளர் மாரிமுத்து, அகில இந்திய பெண்கள் முற்போக்கு சங்கத்தின் நிர்வாகி மீனாட்சி ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள். சுதா சுந்தரராமன் இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலை வர் சுதா சுந்தரராமன் பங்கேற்று பேசுகையில், பெண்களுக்கான பாதுகாப்பு இன்றைக்கே மிகப் பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது. எண்ணற்ற துறைகளில் பெண்களின் வளர்ச்சி அதிகமாக இருந்தாலும், அவர்களுக்கான பாது காப்பை உறுதிபடுத்த ஒன்றிய, மாநில அரசுகள் தவறி உள்ளனர். பிற்போக்கு கருத்து களை திணிக்கும் வேலை யில் இன்றைய ஆட்சி யாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.பாரதி கண்ட புதுமைப் பெண்களாக நாம் புறப்படுவோம்.விலைவாசி உயர்வால் அன்றாடம் பாதிக்கப்படுவது குடும்ப தலைவியாக உள்ள பெண்கள் என்பது அனை வருக்கும் தெரியும். அத்தகைய தாக்குதலை நாம் எதிர்கொள்வதற்கு நமக்கான அரசியலை நாம் தேர்வு செய்ய வேண்டும் என்றார். விழாவில் லிக்காய் முகவர் சங்க த்தின் துணைத் தலைவர் அன்பரசி ஜூலியட்,இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச துணைத்தலைவர் வந்தனா, மற்றும் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் ஷீத்தல்நாயக், பர்கத் சுல்தானா,தாட்சாயினி, சிவகாமி, விஜயா, உட்பட திரளான பெண்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அண்ணா சிலை அருகில் இருந்து கோரிக்கை பதாகைகளை ஏந்தியவாறு பெண்கள் பங்கேற்ற ஊர்வலம் நடைபெற்றது.