புதுச்சேரி, பிப். 9- ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து நாடு தழுவிய அளவில் பிப்ரவரி 22 முதல் 28ஆம் தேதி வரை கண்டன இயக்கம் நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் புதுச்சேரி யில் செய்தியாளர்களிடம் கூறுகை யில், நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு சமர்ப்பித்த பட்ஜெட் என்பது ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்க ளின் வாழ்வாதாரத்தை பாதுகாப் பதற்கோ, சந்திக்கக்கூடிய பிரச்னை களை தீர்ப்பதற்கான பட்ஜெட் அல்ல. அது கார்ப்பரேட் பெருமுதலாளி களின் நலன் கருதி சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட்டாகும். பட்ஜெட்டுக்கு முதல் நாள் பொரு ளாதார ஆய்வறிக்கை சமர்ப்பித் தார்கள். அதையும், பட்ஜெட்டையும் இணைத்து பார்க்க வேண்டும். பொருளாதார ஆய்வறிக்கை யில் இந்திய பொருளாதாரம் ஏற்று மதியை நம்பி வளர்ச்சி அடையாது. இன்றைய உலக சூழலில் ஏற்று மதிக்கு சாத்தியமில்லை. எனவே, உள்நாட்டில் உள்ள மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்துவதன் மூலம்தான் பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என்று கூறப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு முன்பு 2019-20இல் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி என்பது 7.8 விழுக்காடு. 2023-24ல் ஒன்றிய அரசின் மதிப்பீட்டின்படி ஜிடிபி என்பது 6.1 சதவீதம்தான். கொரோனாவுக்கு முந்தைய பொரு ளாதார வளர்ச்சியை எட்ட முடியாத நிலை இருக்கும்போது, மக்களுடைய வாங்கும் சக்தியை அதிகப்படுத்தும் வகையில் பட்ஜெட் அமையவில்லை. பல்வேறு சமூக நலத்திட்டங்க ளுக்கான நிதியை ஒன்றிய அரசு வெட்டி சுருக்கியுள்ளது. மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கான நிதி ரூ.1 லட்சம் கோடியில் இருந்து 60 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப் பட்ட கரிப்கல்யான் அன்னை யோஜன திட்டத்திற்கான உணவு வழங்கும் திட்டத்தை நிறுத்தி யுள்ளது. மேலும் மாநிலத்திற்கு மானிய விலையில் வழங்கப்படும் அரிசி, கோதுமை திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. உரத்துக்கான மானியம், கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளுக்கான நிதியும் குறைக் கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த பட்ஜெட் கார்ப்பரேட்டுக்கு சாதகமானது என்றார். அதானி குழுமம் பங்கு சந்தை மோசடி குறித்த கேள்விக்கு நாடாளு மன்றத்தில் ஒரு வார்த்தை கூட பதில் அளிக்கவில்லை. 2014இல் பிரதமர் மோடி ஆட்சிக்கு வரும்போது அதானியின் சொத்து மதிப்பு ரூ.50 ஆயிரம் கோடி. இப்போது அதானி யின் மொத்த சொத்து ரூ.10 லட்சம் கோடி. மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கக் கூடிய வகையில் பட்ஜெட் டில் நிதியை குறைத்திருப்பதை கண்டித்தும், பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தியும் நாடு முழுவ தும் வரும் 22 முதல் 28ஆம் தேதி வரை போராட்டங்கள் நடத்த உள்ளோம். புதுச்சேரியில் வரும் 27, 28 ஆகிய தேதிகளில் 6 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்துள்ளோம். கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது செல்வ வரி போட வேண்டும். உணவு பண்டங்கள், மருந்து பொருட்களுக் கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும். கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்துக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். சமூக நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண் டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், கூட்டணி அரசு கல்வியை தனியார் மயமாக்கு வதற்கு வேகமான நடவடிக்கையை எடுத்து வருகிறது. கல்வியை தனி யார் மயமாக்கக் கூடாது. ஏனென் றால், 2010-11இல் 440 அரசு பள்ளிகள் இருந்தது. 2021-22ல் 422ஆக குறைந்து, 18 அரசு பள்ளிகள் மூடப் பட்டுள்ளது. அரசு பள்ளிகளை மூடினால் ஏழை, எளிய குடும்பங் களை சேர்ந்த குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும். தனியார் பள்ளி யில் சேர்ந்த குடும்பத்தினர் கொரோனா காலத்தில் வருமானம் இல்லாததால் தங்களது பிள்ளை களை அரசு பள்ளியில் சேர்த்தனர். சுமார் 20 ஆயிரம் குழந்தைகள் தனி யார் பள்ளியில் இருந்து அரசு பள்ளிக்கு மாறியுள்ளனர். இவ்வாறு சேர்ந்த மாணவர்களை விரட்டி மீண்டும் தனியார் பள்ளிக்கு செல் லும் நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. அரசு பள்ளிகளை மூடக்கூடாது. மூடிய பள்ளிகளை உடனே திறக்க வேண்டும். 25 மாண வர்களுக்கு ஒரு ஆசிரியரை நியமிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
முதல்வர் ராஜினமா செய்க!
மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஒன்றிய அரசு ஏற்கவில்லை என்றால், ஒன்றிய அரசை கண்டித்து முதல்வர் பதவியை ரங்கசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்று செய்தி யாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஜி.ராமகிருஷ்ணன் பதிலளித்தார். இச்சந்திப்பின் போது கட்சி யின் மாநிலச் செயலாளர் ஆர். ராஜாங்கம், செயற்குழு உறுப்பி னர்கள் சுதா சுந்தரராமன், பெருமாள், ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன், சீனுவாசன், கொளஞ்சியப்பன், சத்தியா ஆகியோர் உடனிருந்தனர்.