புதுச்சேரி, மார்ச் 2- பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவையை உடனே வழங்க வேண்டும் என பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது. பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் புதுச்சேரி மாவட்ட 10ஆவது மாநாடு மாவட்டத் தலைவர் என்.கொளஞ்சியப்பன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஏ.பாபு ராதாகிருஷ் ணன் மாநாட்டை துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் ஏ.சுப்புரமணியன் வேலை அறிக்கையையும், பொருளாளர் கே.கலைச்செல்வி வரவு-செலவு அறிக்கை யையும் சமர்ப்பித்தனர். மாநாட்டையொட்டி பிஎஸ்என்எல் "புத்தாக்கமும் தேசிய பணமாக்கலும்' என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடை பெற்றது. பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் அகில இந்திய துணைப் பொதுச்செயலாளர் எஸ்.செல்லப்பா, பிஎஸ்என்எல் புதுச்சேரி தலைமை பொதுமேலாளர் ெஜயக்குமார் ஜெயவேல், துணை பொதுமேலாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
தீர்மானம்
எல்ஐசி., வங்கி, பிஎஸ்என்எல் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை பணமாக்கல் என்ற அடிப்படையில் தனியார் மயமாக்கும் ஒன்றிய அரசை எதிர்த்து நாடு தழுவிய அளவில் வரும் மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வது. பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள்
மாவட்டத் தலைவராக கே.சந்திர சேகரன், செயலாளராக ஏ.சுப்புர மணியன், பொருளாளராக சங்கர பார்வதி உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.