புவனேஸ்வர்:
உழைக்கும் பத்திரிகையாளர்களை, கொரோனா முன்கள பணியாளர்களாக அறிவித்து, ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.
உழைக்கும் பத்திரிகையாளர்கள் தடையின்றி செய்திகளை வழங்குவதன் மூலமும், கொரோனா தொடர்பான பிரச்சனைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும், கொரோ னாவுக்கு எதிரான போருக்கு பெரும் ஆதரவாக இருந்து,அரசுக்கு சிறந்த சேவையைச்செய்கின்றனர் என்று நவீன் பட்நாயக் குறிப்பிட்டுள்ளார்.ஒடிசா முதல்வரின் இந்த அறிவிப்பால், மாநிலத்தின் 6944 பத்திரிகையாளர்கள் பயனடைய உள்ளனர். கோபபந்து சம்பாடிகா ஸ்வஸ்திய பீமா யோஜனாதிட்டத்தின் கீழ் சேர்க்கப்பட் டுள்ள இந்த 6944 உழைக்கும் பத்திரிகையாளர்களும் தலா ரூ. 2 லட்சம் சுகாதார காப்பீடுவசதியையும் பெறுகின்றனர்.ஒடிசாவில், கொரோனாவால் உயிரிழக்கும் பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருக்கு 15 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் நவீன் பட்நாயக்அலுவலகம் தெரிவித்துள் ளது.