states

img

ஒடிசாவில் மாட்டிறைச்சி சமைத்ததாகக் கூறி மாணவர்கள் மீது நடவடிக்கை

ஒடிசா, செப்.16- ஒடிசா மாநிலத்தில் கல்லூரி விடுதியில் மாட்டிறைச்சி சமைத்ததாகக் கூறி 6 சிறுபான்மை மாணவர்கள் உட்பட 7 மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ள சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.
 கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி ஒடிசாவிலுள்ள கஞ்சம் மாவட்டத்திலுள்ள பரலா மகாராஜா பொறியியல் கல்லூரி விடுதியில் மாட்டிறைச்சி சமத்து சாப்பிட்டதாகக் கூறி 6 சிறுபான்மை மாணவர்கள் உட்பட 7 மாணவர்கள் மீது பஜ்ரங் தளம் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 
இதுகுறித்து மாணவர்கள் தாங்கள் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட ஆட்டிறைச்சியைத் தான் சமைத்ததாக விளக்கமளித்தும் அதை ஏற்றுக்கொள்ளாத கல்லூரி நிர்வாகம் மாணவர்களை விடுதியிலிருந்து நீக்கியதோடு மட்டுமல்லாமல் ஒருவருக்கு ரூ.2000 அபராதமும் விதித்துள்ளது.