states

img

முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி கொரோனா தொற்றல் உயிரிழப்பு

இந்தியாவின் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் அட்டர்னி ஜெனரலுமான  சோலி சொராப்ஜி கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி கடந்த சில நாட்களாக உடல்நல குறைவால் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.  இதையடுத்து அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.  அவருக்கு வயது 91.  இந்தியாவின் உயரிய பத்ம விபூஷண் விருது பெற்ற பெருமைக்கு உரியவர்.  கடந்த 1930ம் ஆண்டு மும்பையில் பிறந்த அவர் பாம்பே உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பயிற்சியை பெற்றுள்ளார்.

இதன்பின்னர் கடந்த 1971ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரானார்.  கடந்த 1989ம் ஆண்டு அவர் அட்டர்னி ஜெனரலானார்.  இதன்பின்பு கடந்த 1998ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை மீண்டும் அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்துள்ளார்.
சொராப்ஜி 2000 முதல் 2006 வதை ஐ.நா உலக நிரந்தர நீதிமன்றத்தில் நடுவராக பணியாற்றினர். மேலும் 2002ம் ஆம் ஆண்டில் இந்திய அரசியலமைப்பின் செயல்பாட்டை மறு ஆய்வு செய்யும் ஆணையத்தின் உறுப்பினராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.