போபால் பாஜக ஆளும் மத்தி யப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனி நகரம். நாட்டின் புகழ் பெற்ற கோவில் நகரமான உஜ்ஜைனி நகரின் பிளாட்பாரத்தில் பட்டப்பகலில் பெண் ஒருவர் பாலி யல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி யுள்ளது.
ஆகஸ்ட் மாத இறுதியிலிருந்து சமூகவலைத்தளங்களில் ஆபாச வீடியோ ஒன்று வைரலாகி வரு கிறது. அதில் பட்டப்பகலில் உஜ்ஜைனி பிளாட்பாரத்தில் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்யும் சம்பவமும், பெண்ணை காப்பாற்றாமல் பலர் வீடியோ எடுக்கும் நிகழ்வும் வீடியோவில் பதிவாகி இருந்தது. தொடர்ந்து செப்டம்பர் 4 அன்று உஜ்ஜைனி நகர காவல் நிலையத்தில் பெண் ஒருவர், “தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய லோகேஷ் என்பவர் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்தார்” என புகார் அளித்தார். பெண் புகார் அளித்த பின்னரே சமூகவலைத்தளங்களில் வைர லாகி வரும் ஆபாச வீடியோ, புகார் அளித்த பெண்ணின் வீடியோ என நிரூபணமாகியது.
முதல்வரின் சொந்த தொகுதி
பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடமான உஜ்ஜைனி நகரம் மத்தியப்பிரதேச பாஜக முதல்வரான மோகன் யாதவின் சொந்த தொகுதியாகும். தனது சொந்த தொகுதியில் அதுவும் பட்டப் பகலில் பெண் ஒருவர் பொது இடத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முதல்வர் மோகன் யாதவ் எவ்வித உத்தரவும் பிறப்பிக்காமல் இருப்பது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மரித்த மனிதநேயம்...
பட்டப்பகலில் பிளாட்பாரத்தில் நடந்த இந்த பாலியல் வன்கொ டுமை சம்பவத்தை தடுக்காமல், பல ரும் வீடியோ எடுத்ததுதான் அதிர்ச்சி அளித்த விசயமாக உள் ளது. சுமார் 10க்கும் மேற்பட்ட ஆண்கள் இந்த சம்பவத்தை வீடி யோ எடுத்தும், பலர் கண்டும் காணாதது போல சம்பவ இடத்தை விட்டு கடந்து சென்றுள்ளனர். குறிப் பாக பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடத்திற்கும், உஜ் ஜைனி நகர காவல்நிலையத் திற்கும் 500 மீட்டர் இடைவெளிதான் உள்ளது. ஆனால் வீடியோ எடுத்த நபர்கள் மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்த நபர்கள் ஒருவர் கூட காவல்நிலையத்தில் புகார் அளிக்க வில்லை. சம்பவம் தொடர்பாக தக வல் கூட அளிக்கவில்லை. இதனால் உஜ்ஜைனி நகரவாசிகளின் செய லால் மனிதநேயம் மரித்தது என நெட்டிசன்கள் கண்டனம் தெரி வித்து வருகின்றனர்.
திசை திருப்பும் ம.பி., பாஜக அரசு
பிளாட்பாரத்தில் வைத்து பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாட்டில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள், நெட்டிசன்கள் என பாஜக அரசு, ஆளும் மத்திய பிரதேசத்திற்கு எதிராக நாடு முழு வதும் கண்டனக்குரல் எழுப்பி வரு கின்றனர். இதனால் பதற்றம் அடைந்த பாஜக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படை யில் குற்றவாளியான லோகேஷை இரண்டு மணி நேரத்தில் கைது செய்துவிட்டோம். இருவரும் மது அருந்தியதால் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது என பிரச்சனையை திசை திருப்பும் நோக்கத்தில் கூறியுள்ளது.