திருவனந்தபுரம்:
ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக கேரளத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்தும் தொடர் சத்தியாகிரகத்தை சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி ஆளுநர் மாளிகைக்கு முன்னால் தொடங்கி வைத்தார்.எரிபொருள் விலை உயர்வு, வேலையின்மை மற்றும் தடுப்பூசி விநியோகத்தில் திறமையின்மைக்கு எதிராக ஊராட்சி ஒன்றிய மையங்களில் உள்ள ஒன்றிய அரசுஅலுவலகங்களுக்கு முன்பு இப்போராட்டம் நடைபெற்று வருகிறது. திங்கள் முதல் வெள்ளி (செப்.6-10) வரை இந்த தொடர் சத்தியாக்கிரகம் நடைபெற உள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொறுப்பு செயலாளர் ஏ.விஜயராகவன் இறுதி நாள் போராட்டத்தை துவக்கிவைக்கிறார். இறுதிநாளான வெள்ளி யன்று வாகன இயக்கம் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரச்சாரமாக வியாழனன்று ஊராட்சி ஒன்றிய மையங்களில் போராட்ட அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.