states

img

ரயிலில் பெண் மீது தீ வைப்பு - 3 பேர் பலி!

       கேரளா கோழிக்கோட்டில் ரயிலில் பெண் மீது மர்மநபர் தீ வைத்ததில் அதிலிருந்து தப்பிக்க முயன்ற பயணிகள் ரயிலில் இருந்து குதித்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
   இச்சம்பவம் ரயில் நேற்றிரவு 9.50 மணியளவில் கோழிக்கோடு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட நிலையில் நடந்துள்ளது ஆலப்புழா - கண்ணூர் இடையே ரயிலில் முன்பதிவு செய்த பயணிகளுக்கான பெட்டியில் பயணி ஒருவர் மீது ச பயணி ஒருவர் ஸ்ப்ரே மூலம் எண்ணை ஊற்றி தீ வைத்துள்ளார்.
 ரயில் தண்டவாளத்திலிருந்து ஒரு குழந்தை உட்பட மூன்று பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ரயிலில் தீ பிடிக்கும் எனப் பயந்து அந்த மூவரும் ரயிலில் இருந்து குதித்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்களில் ஒருவர் தவ்ஃபீக், மற்றொருவர் ரெஹானா என அடையாளம் தெரியவந்துள்ளது. மேலும் தண்டவாளத்தில் கிடந்த ஒரு பையிலிருந்து இரண்டு மொபைல் போன்கள் மற்றும் பெட்ரோல் பாட்டில் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. அதிலிருந்த பேப்பரில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருந்ததால் இந்தச் சம்பவத்தில் ஏதேனும் தீவிரவாத சதி இருக்கிறதா என சந்தேகிக்கபடுகிறது.
சிசிடிவி கட்சியில் அந்த மர்மநபர் ரயி நிலையத்தின் அருகே ஒரு இருசக்கர வாகனத்தில் ஏறி சென்றது பதிவாகியுள்ளது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.