பிரிட்டனில் இருந்து எர்ணாகுளம் வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஒமிக்ரான் தொற்று இந்தியா உள்பட பல்வேறு மாநிலங்களில் பரவி வருகிறது. மேலும் ஒமிக்ரான் தொற்று அதி தீவிரமாகவும், ஆபத்தானதாகவும் இருக்குமென உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் பிரிட்டனில் இருந்து எர்ணாகுளம் வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் எர்ணாகுளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் இதுவரை ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, பஞ்சாப் மாநிலங்களில் தலா ஒருவருக்கு இன்று ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், பிரிட்டனில் இருந்து கேரளா வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.