states

img

மாநிலங்களவைக்கான எல்டிஎப் வேட்பாளர்கள் வி.சிவதாசன், ஜான் பிரிட்டாஸ் வேட்புமனு தாக்கல் செய்தனர்.....

திருவனந்தபுரம்:
கேரளத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடும், இடது ஜனநாயக முன்னணி (LDF) வேட்பாளர்கள் ஜான் பிரிட்டாஸ், டாக்டர் வி. சிவதாசன் ஆகியோர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

இருவரும் திங்களன்று காலை 11.30 மணியளவில் சட்டமன்ற செயலாளரிடம் தங்களின் வேட்பு மனுக்களை சமர்ப்பித்தனர். இடது ஜனநாயக முன்னணி ஒருங்கிணைப்பாளரும், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரளமாநில (பொறுப்பு) செயலாளருமான ஏ. விஜயராகவன், சிபிஐ மாநில செயலாளர் கானம் ராஜேந்திரன் ஆகியோர் வேட்புமனுத் தாக்கலின் போது உடனிருந்தனர்.மாநிலங்களவை உறுப்பினர் களாக உள்ள கே.கே. ராகேஷ் (LDF), வயலார் ரவி, பி.வி.அப்துல் வஹாப் (UDF) ஆகியோர் இந்த மாதம் 21-ஆம் தேதி ஓய்வு பெறஉள்ளனர். தற்போதைய நிலையில் எல்டிஎப்-க்கு இரண்டு உறுப்பினர்களையும் யுடிஎப்-க்கு ஒரு உறுப்பினரையும் தேர்வு செய்யும் வலிமை சட்டமன்றத்தில் உள்ளது.இதன்படி யுடிஎப் சார்பில் பி.வி.அப்துல் வஹாப் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வாக்கெடுப்பு தேவைப்படாத நிலையில் இம்மூவருமே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவர்.