திருவனந்தபுரம்:
சமையலறை வேலை மற்றும் குழந்தை பராமரிப்பு ஆகியவை பெண்களால் செய்யப்பட வேண்டும் என்ற பொது கருத்து மாற வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக கேரளாவில் கலாச்சாரத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநில அளவிலான ‘சமம்’ பிரச்சாரத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், பெண்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகளில் ஒன்று வேலைவாய்ப்பு. இது வீட்டில் தொடங்குகிறது என்றார். சமையலறை வேலைகளுடன், அவர்கள் வயதானவர்கள் மற்றும் குழந்தைகளையும் கவனித்துக் கொள்ள வேண்டும்; இவை அனைத்தும் பெண்களால்தான் செய்யப்பட வேண்டும் என்ற பொதுவான கருத்து மாற வேண்டும். இதற்கு பெரிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்றும் முதல்வர் கூறினார்.“கேரள மக்கள் தொகையில் பெண்கள் முன்னணியில் உள்ளனர். ஆனால் பணியாளர்கள் குறைவாக உள்ளனர். இதை மாற்ற வேண்டும். சமூகத்தில் வகுப்புவாத சக்திகள் பெண்களை சமையலறைக்கு திருப்பி அனுப்ப முயற்சி செய்கின்றன. திருமணச் சந்தையில் பெண் ஒரு பொருளாகக் கருதப்படும் சூழ்நிலை இருந்தது.அத்தகைய சமூக சூழ்நிலையிலும் சில தலையீடு இருந்தது. இவற்றில் ஒன்று அதிகார பரவலாக்கம் ஆகும். இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் பெண்களிடம் ஆர்வம் குறைவாக உள்ளது என்ற கருத்தை அகற்ற அதிகார பரவலாக்கம் பயன்பட்டது. பெண்களுக்கான நிதி தன்னிறைவை அடைவதில் குடும்பஸ்ரீ திட்டம் ஒரு மைல்கல். பெண்களை மேம்படுத்தும் நோக்கில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது” என்றும் பினராயி விஜயன் கூறினார்.