states

img

வரலாற்றுப் போராட்டத்தில் கேரளம் பங்கேற்கிறது.... விவசாயிகள் குழு தில்லி பயணம் தொடங்கியது...

கண்ணூர்:
தில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் கரம்கோர்க்க கேரள விவசாயிகள் கண்ணூரிலிருந்து திங்களன்று (ஜன.11) காலை புறப்பட்டனர். அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை கண்ணூர் தலைமை தபால் நிலையம் முன்பு கொடியசைத்து பயணத்தை தொடங்கி வைத்தார்.

கண்ணூரைச் சேர்ந்த முதல் குழுவில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 500 ஊழியர்கள் உள்ளனர். இக்குழு 14 ஆம் தேதி ஷாஜகான்பூர் எதிர்ப்பு மையத்தை எட்டும். விவசாயிகளின் இந்தக் குழுவுக்கு மாநில துணைத்தலைவர் வி.எம்.சவுக்கத் தலைமை தாங்குவார். ஷாஜகான்பூரில், மாநிலத் தலைவர் கே.கே.ராகேஷ் எம்.பி., செயலாளர் கே.என்.பலகோபால் ஆகியோர் தலைமை தாங்குவார்கள்.கண்ணூர் மாவட்டத்தில் தளிப்பறம்பு, பிலாத்தறா, பயன்னூர் ஆகிய இடங்களில் வரவேற்பு அளிக்கப்படும். பின்னர் காசர்கோடு நகரில் வரவேற்பு. இங்கிருந்து அணிவகுப்பில் காசர்கோடு மாவட்ட விவசாயிகள் இணைவார்கள். 13 ஆம் தேதி இரவு ஜெய்ப்பூரை அடையும். 14 ஆம் தேதி காலை தில்லிக்கு புறப்படுவர். கேரளாவின் அடுத்த குழு 21 ஆம் தேதி கண்ணூரிலிருந்து புறப்படும்.