திருவனந்தபுரம்,மார்ச்.14- தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டத்திற்கு கேரளம் முதலமைச்சருக்கு நேரில் சந்தித்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை தொடர்பாக, சென்னையில் நடைபெற உள்ள தென் மாநிலங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் தென் சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கேரளம் முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.