கேரள பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல் வரலாற்றில் புதிய சகாப்தத்தின் புதிய அடையாள மாக அனைத்து இடங்களிலும் பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் அனை வரும் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் போட்டியிட்டவர்களாவர்.
கணக்குக் குழுத் தேர்தலில் மொத்தம் உள்ள 5 இடங்களையும், மாணவர் கவுன் சில் தேர்தலில் 10-இல் 8 இடங்களையும், செயற்குழுத் தேர்தலில் 15-இல் 13 இடங்களையும் இந்திய மாணவர் சங்கம் வென்றது. “பொய்களுக்கு எதிராகப் போராட்டம்” என்ற முழக்கத்துடன் தேர் தலை எதிர்கொண்டது. இந்திய மாண வர் சங்கம் கேரளப் பல்கலைக் கழகத் தின் வரலாற்றில் முதன்முறையாக மாண வர் சங்கத்தின் நிர்வாக பொறுப்பு அனைத் திற்கும் பெண்களை போட்டியிடச் செய்து மகத்தான வெற்றியை ஈட்டியுள்ளது.
பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவராக கொல்லம் எஸ்.என். கல்லூரி மாணவி சுமி.எஸ், பொதுச் செயலாள ராக திருவனந்தபுரம் வழுதக்காடு அரசு மகளிர் கல்லூரியின் அமிதாபாபு, துணை தலைவர்களாக திருவனந்தபுரம் பல் கலைக்கழக கல்லூரியின் அப்சல்னா என், ஆலப்புழா எஸ்.டி. கல்லூரியின் ஆதிரா பிரேம்குமார், திருவனந்தபுரம் வாழிச்சால் இம்மானுவேல் கல்லூரியின் நந்தனா எஸ்.குமார், இணைச் செய லாளர்களாக நங்ஙூர்குளங்கரை டி.கெ.எம்.எம். கல்லூரியின் அனன்யா.எஸ், கொல்லம் டி.கெ.எம். கல்லூரியின் அஞ்சனாதாஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்திய மாணவர் சங்கத்தின் அமோக வெற்றிக்காக உழைத்த அனைத்து செயல்பாட்டாளர்களுக்கும் வாக்களித்து வெற்றி பெறச் செய்த மாணவர்களுக்கும் மாணவர் சங்க மாநில தலைவர் கே.அனுஸ்ரீ செயலாளர் பி.எம்.ஆர்ஷோ ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.