states

img

சிவந்த மண்ணின் புரட்சிகர நட்சத்திரம் கே.ஆர்.கவுரியம்மாவுக்கு இறுதி அஞ்சலி....

ஆலப்புழா:
ஒருபோதும் இறக்காத கவுரியம்மாவின் நினைவுகள் முழக்கங்களாக அவர்களின் தொண்டையில் இருந்து உயர்ந்தன. அரசு மரியாதையின் ஒரு பகுதியாக துப்பாக்கிகளும் முழங்கின.

திருவனந்தபுரத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு, காலடிப்பராம்பில் ஒரு துயரம் கவிந்த ஊர்வலமாக ஆலப்புழயில் உள்ள சாத்தநாடு வீட்டிற்கு கொண்டு வரப்பட்டார். ஆலப்புழா எஸ்டிவி நூற்றாண்டு மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தேசாபிமானி சார்பில் தலைமை ஆசிரியர் பி.ரஜீவ் மற்றும் சிபிஎம் ஆலப்புழா மாவட்டக் குழு சார்பில் செயலாளர் ஆர் நாசர் ஆகியோர் மாலை அணிவித்தனர்.  சபாநாயகர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன், அமைச்சர்களான ஜே.மெர்சிகுட்டியம்மா, ஜி.சுதாகரன், பி.திலோத்தமன், முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, மக்களவை உறுப்பினர் ஏ.எம்.ஆரிப் உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர்.  புதிதாக தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூக- கலாச்சார பிரமுகர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பிரமுகர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.