states

img

நாட்டிலேயே ஆக்சிஜன் படுக்கைகள் அதிகமுள்ள அம்பலமுகள் மருத்துவமனை....

திருவனந்தபுரம்:
நாட்டில் அதிக எண்ணிக்கையிலான ஆக்ஸிஜன் படுக்கைகளைக் கொண்ட கோவிட் சிகிச்சை மையம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள அம்பலமுகளில் அமைக்கப்பட்டுள்ளது.

ஞாயிறன்று திறக்கப்பட்ட தற்காலிக கோவிட் மருத்துவமனையில் 100 ஆக்ஸிஜன் படுக்கைகள் உள்ளன. அடுத்த கட்டமாக ஆக்ஸிஜன் படுக்கைகளின் எண் ணிக்கையை 5 நாட்களில் 500 ஆகவும், பின்னர் 8 நாட்களுக்குப் பிறகு 1500 ஆகவும் அதிகரிக்கப்பட உள்ளது. சி பிரிவைச் சேர்ந்த நோயாளிகள் இங்கு அனுமதிக்கப்படுகிறார்கள். 130 மருத்துவர்கள் மற்றும் 240 செவிலியர்கள் உட்படசுமார் 480 பேர் இங்கு பணியாற்றுவார்கள். தற்போது கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. ஆனால், கடற்படையின் தலைமையில் பாதுகாப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.மாவட்ட நிர்வாகத்தின் தலைமையிலான பொது மற்றும் தனியார் கூட்டாண்மையில் செயல்படும் இந்த மருத்துவமனைக்கு பிபிசிஎல் ஆக்ஸிஜன் ஆலையில் இருந்து நேரடியாக ஆக்ஸிஜன்வழங்கப்படும், இது போக்குவரத்து பிரச்சனைகள் மற்றும் ஆக்ஸிஜனை வழங்குவதில் உள்ள பற்றாக் குறையைத் தவிர்க்க உதவும்.