கொச்சி:
பத்தாம் வகுப்பு மாணவன் அபிமன்யுவை படுகொலை செய்த வழக்கில் ஆர்எஸ்எஸ் கூட்டத்தைச் சேர்ந்த சஜய் ஜீத் (20)காவல்துறையில் சரணடைந் துள்ளான். பாலாரிவட்டம் காவல் நிலையத்தில் சரணடைந்த அவர், தானொரு தீவிர ஆர்எஸ்எஸ் ஊழியன் என்று காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள் ளான்.ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாமில் பங்கேற்ற சஜய் ஜீத்தின் படங்கள் வியாழனன்று வெளியிடப்பட்டன. வள்ளிகுந்நத்து படயணிவெட்டம் கோயிலில் நடந்த விஷு திருவிழாவின் போது அபிமன்யுவை ஆர்எஸ்எஸ் குண்டர் கள் குத்திக் கொலை செய்தனர். இந்த சம்பவத்தின்போது அபிமன்யுவுடன் இருந்த வள்ளிகுந்நத்தைச் சேர்ந்த காசிநாதன் (16), ஆதர்ஷ் லால் (18) ஆகியோரும் பலத்தகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.