states

img

தேர்தல் விதிகளுக்கு எதிராக மத்திய அமலாக்கத்துறை செயல்படுகிறது.... கேரள முதல்வர் குற்றச்சாட்டு தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம்....

தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக மத்திய அமலாக்கத்துறை செயல்படுகிறது என்று குற்றம்சாட்டி கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா,மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. இதைதொடர்ந்து இந்த  5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள்  உடனடியாக அமலுக்கு வந்தன. இதன்படி கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படத்தை நீக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் மத்திய சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் மத்திய அமலாக்கத்துறையினர் தேர்தல் விதிகளுக்கு எதிராக செயல்படுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து பினராயி விஜயன், மத்திய தேர்தல் தலைமை ஆணையருக்கு அனுப்பியுள்ள புகார் கடிதத்தில் கூறியிருப்பதாவது: 

கேரளாவிற்கு வருகை தந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள உட்கட்டமைப்பு நிறுவனமான கிப்பி அமைப்பின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார். 
இதுகுறித்த அனைத்து தகவல்களையும் அமலாக்கத்துறையினர் ஊடகங்களுக்கு வழங்கியுள்ளனர். இதுகுறித்து மாநில அரசுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இதனால் மத்திய அமலாக்கத்துறையினர் பாரபட்சமாக செயல்பட்டு வருகின்றனர். இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது. மாநில அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.