states

img

ஜார்கண்ட்: ரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி 6 தொழிலாளர்கள் பலி

ஜார்கண்ட் மாநிலம் நிச்சித்பூர் ரயில் நிலையத்தில் 6 ரயில்வே ஒப்பந்த தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஜார்கண்ட் மாநிலம் நிச்சித்பூர் ரயில் நிலையம் அருகே கோமோஹ்-நிச்சித்பூர் ரயில் பாதையில் மேல்நிலைக் கருவி (OHE) பொருத்தப்பட்ட மின் கம்பம் அமைக்கும் பணியின்போது, 6 ரயில்வே ஒப்பந்த தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.