states

img

ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை!

ஜம்மு காஷ்மீரில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், 1 மணி நிலவரப்படி காங்கிரஸ் கூட்டணி மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 51 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி 42 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 7 தொகுதிகளிலும், ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி 3 தொகுதிகளிலும், சிபிஎம் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலா 1 தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 29 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் இரு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கந்தர்பால் தொகுதியில் 22080 வாக்குகளும், பட்காம் 32,344 வாக்குகளும் பெற்று முன்னிலை வகிக்கிறார். குல்காம் தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் முகமது யூசுப் தாரிகாமி 17423 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.