ராஞ்சி:
பி.எம். கேர்ஸ் நிதியிலிருந்து வழங்கப்பட்ட வெண்டிலேட்டர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்று பல்வேறுமாநிலங்களிலும் புகார்கள் எழுந்து வருகின்றன. தங்களுக்கு வழங்கப்பட்ட 250 வெண்டிலேட்டர்களை பயன்படுத்த முடியவில்லை என்று பஞ்சாப் மாநிலமும், 490 வெண்டிலேட்டர்கள் முற்றிலும்பழுதாகி இருந்தன என்று மகாராஷ்டிர மாநிலமும் குற்றம் சாட்டியிருந்தன.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்திலும் 45 வெண்டிலேட்டர்களை வேலை செய்யவில்லை என்று, அம்மாநிலத்தின் மிகப்பெரிய மருத்துவமனையான ‘ராஜேந்திரா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ்’-சின் தீவிரசிகிச்சைப் பிரிவுத் தலைவர் டாக்டர் பிரதீப் பட்டாச்சார்யா குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் மோடியுடன் நடைபெற்றகாணொலி வாயிலான கலந்துரையாடலில், நேரடியாகவே இந்த புகாரை டாக்டர் பிரதீப் பட்டாச்சார்யா முன்வைத் துள்ளார்.‘பிரதமரின் பி.எம்.கேர்ஸ் நிதி மூலமாக எங்களது மருத்துவமனைக்கு 100 வெண்டிலேட்டர்களும், 100 ஆக்சிஜன் செறிவூட்டிகளும் வழங்கப்பட்டன. முழுவதுமான இந்திய தயாரிப்புகளை எங்களுக்கு வழங்கியதற்காக பிரதமருக்குநாங்க நன்றியை தெரிவித்தோம். இருப்பினும், பி.எம். கேர்ஸ் மூலம்எங்களுக்கு வழங்கப்பட்ட வெண்டிலேட்டர்களில், 45 வெண்டிலேட்டர்கள் வேலை செய்யவில்லை. மேலும் வெண்டிலேட்டர்கள் பலவற்றில் உதிரிபாகங்களைக் காணவில்லை என்பதால், அவற்றை இயக்க முடியவில்லை.எனவே, எண்ணிக்கை கணக்கிற்காக வழங்குவதை விட, உயர்தர தயாரிப்புகளை மத்திய அரசு வழங்கிட வேண்டும்’ என்று நேருக்கு நேராக டாக்டர் பிரதீப் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.