அரியானா கல்குவாரியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அரியானா மாநிலம் பிவானி பகுதியில் உள்ள கல்குவாரியில் இன்று காலை சுரங்கப் பணியின்போது மலையின் பெரும்பகுதி திடீரென விரிசல் ஏற்பட்டு சரிந்தது. இதனால் அங்கு நிறுத்தி வைத்திருந்த அரை டஜன் பாப்லாண்ட் இயந்திரங்கள் மற்றும் டம்ப்பர்கள் புதைந்தது. இந்த நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 2 பேரை படுகாயங்களுடன் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனைஅடுத்து இங்கு பணிபுரியும் பல தொழிலாளர்கள் பலர் காணவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் தெரிவிக்கையில், பிவானி பகுதியில் ஏற்பட்ட எதிர்பாராத நிலச்சரிவு மிகவும் வருத்தம் அளிக்கிறது. மீட்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. நிலச்சரிவில் சிக்கிக் கொண்டுள்ளவர்களை மீட்கும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.