ஹரியாணாவில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றுள்ளது.
ஹரியாணா மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி மொத்தம் 61% வாக்குகள் பதிவுள்ளன. பல்வாலில் 67.69% வாக்குகளும், ஜிந்தில் 66.02% வாக்குகளும், அம்பாலாவில் 62.26% வாக்குகளும், ஃபரிதாபாத்தில் 51.28% வாக்குகளும், குர்கானில் 49.97% வாக்குகளும், ஹிசாரில் 64.16% வாக்குகளும், ஜஜ்ஜாரில் 60.52% வாக்குகளும் பதிவாகியுள்ளன.