states

img

குஜராத்தில் போலி மருத்துவக் கல்வி வாரியம் - கூண்டோடு சிக்கிய கும்பல்!

குஜராத்,டிசம்பர்.06- குஜராத்தில் போலி சுங்கச் சாவடி, போலி வங்கி, போலி நீதிமன்றம் வரிசையில் போலி மருத்துவக் கல்வி வாரியம் செயல்பட்டுவந்தது தெரியவந்துள்ளது.
குஜராத்தில் போலியாக மருத்துவக் கல்வி வாரியம் நடத்தி, ரூ.70,000 ரூபாய்க்கு மருத்துவர் சான்றிதழ் வழங்கிய கும்பல் மற்றும் இக்கும்பலிடம் சான்றிதழ் வாங்கி, கிளினிக் நடத்தி சிகிச்சை அளித்து வந்த 14 போலி மருத்துவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 
இதுவரை சுமார் 12,000 போலிச் சான்றிதழ்களை விற்றுள்ளதாக தகவல். ஒவ்வொரு ஆண்டும் ரூ.15,000 வரை செலுத்தி, இந்த போலி சான்றிதழை புதுப்பித்தும் வந்துள்ளனர்.