states

img

தீக்கதிர் விரைவு செய்திகள்

உலக ஸ்பீட் ஸ்கேட்டிங் (பனிச்சறுக்கு) சாம்பி யன்ஷிப் போட்டியில் (சீனா) தமிழ்நாடு வீரர் ஆனந்த்குமார் (22) வேல்குமார் மீண்டும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஞாயிறன்று நடைபெற்ற ஆடவர் 42 கி.மீ., மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற ஆனந்த்குமார் ஸ்கேட்டிங்கில் இரண்டாவது தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். இதற்கு முன்பு 1,000 மீட்டர் ஸ்பிரிண்ட் பிரிவில் பங்கேற்று அவர் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய தீர்ப்பாயத்தில் இருக்கும் நிர்வாக தரப்பினர் சிலர் அரசுக்கு எதிராக உத்தரவிட தயங்குகின்றனர் என மத்திய தீர்ப்பாயத்தின் அகில இந்திய மாநாட்டில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறினார்.

தங்கள் சமூகத்தினரை பழங்குடியினர் என அறிவிக்க வலியுறுத்தி மேற்குவங்கம், ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் குர்மி சமுதாய மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 100 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் குப்வாராவில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே நவ்காம் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது. இந்த உயரிய விருது செவ்வாய்க்கிழமையன்று வழங்கப்பட உள்ளது. விருது வென்ற மோகன்லாலுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மோகன் லால்,”20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விருது மலையாளத் திரையுலகிற்கு வருகிறது. எனவே, இந்த விருதை மலையாள திரைத்துறையுடன் பகிர்ந்து கொள்கிறேன்” என கூறினார்.