பஞ்சாப்பில் சிபிஐ அகில இந்திய 25ஆவது மாநாடு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25ஆவது அகில இந்திய மாநாடு சண்டிகர் அருகே மொஹாலியில் (பஞ்சாப்) உள்ள அஜித் சிங் நகரில் ஞாயிறன்று காலை பேரணி பொதுக்கூட்டத்துடன் தொடங்கியது. இதில் பேசிய சிபிஐ பொதுச் செயலாளர் து.ராஜா, பாஜகவை அதிகாரத்திலிருந்து வெளியேற்றுவதே உடனடி நோக்கம் எனவும், வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒன்றுபட்ட போராட்டம் நடத்தப்படும் எனவும் கூறினார். திங்களன்று துவங்கும் பிரதிநிதிகள் மாநாட்டில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். சிபிஐ மூத்த தலைவர் பூபிந்தர் சான்பர் கட்சிக் கொடியை ஏற்றி வைக்க உள்ளார். மாநாட்டை பொதுச் செயலாளர் டி. ராஜா தொடங்கி வைப்பார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி மாநாட்டை வாழ்த்திப் பேசுகிறார். சிபிஐ(எம்-எல்) லிபரேஷன், பார்வர்டு பிளாக், ஆர்எஸ்பி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.