states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா

பலவீனமான பிரதமர் மற்றும் பலவீனமான அரசாங்கத்தின் கொள்கைகளால் அமெரிக்காவில் உள்ள இந்தியத் தொழிலாளர்களிடமிருந்து இப்போது எச்-1 பி விசா கட்டணம் என்ற பெயரில் ரூ.88 லட்சம் பறிக்கப்பட உள்ளது. இதனால், தங்கள் குடும்பங்களைக் காப்பாற்றுவதற்காக அங்கு பணிபுரிந்து வந்த பல இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்பட உள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா

ஜம்மு-காஷ்மீரில் ஒற்றுமையை பராமரிப்பது அரசின் பொறுப்பு மட்டும் அல்ல. ஆளுநர் பொறுப்பில் இருப்பவர்களும் ஒற்றுமையை பேணி காக்க உதவ வேண்டும். அபொழுது தான் ஜம்மு-காஷ்மீர் நல்ல நிலையில் அமைதியாக மாறும்.

ஆம் ஆத்மி மூத்த தலைவர் துர்கேஷ் பதக்

பிரதமர் மோடி நாட்டுக்கு உரையாற்றும் போதெல்லாம், ஒவ்வொரு குடிமக்களும் பயத்துடன் தான் இருக்கிறார்கள். நாட்டின் பொருளாதாரமும் பணவீக்கமும் மிக மோசமான நிலையில் உள்ளன. உங்கள் (மோடி) பேச்சால் எதுவும் மாறப்போவதில்லை. தயவு செய்து மக்களை வாழ விடுங்கள்.

பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா

பிசிசிஐ அமைப்பில் நான் எனது பரிந்துரையை தாக்கல் செய்துள்ளேன். இதில் மிதுன் மன்ஹாஸ் தலைவர் பதவிக்காகவும், நான் துணைத் தலைவர் பதவிக்காகவும், தேவஜித் சைகியா செயலாளர் பதவிக்காகவும், பிரப்தேஜ் சிங் பாட்டியா கூட்டு செயலாளர் பதவிக்காகவும், ரகுராம் பட் பொருளாளர் பதவிக்காகவும் உள்ளோம்.