states

img

ஜனநாயக உரிமைகளை எப்போதும் பாதுகாப்போம் சிபிஎம் கேரள மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் உறுதி

ஜனநாயக உரிமைகளை எப்போதும் பாதுகாப்போம் சிபிஎம் கேரள மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் உறுதி

பத்தனம்திட்டா கம்யூனிஸ்டுகள் எப்போதும் நம்பி க்கையாளர்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் போராட்டங்களை நடத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் தெரிவித்தார். காங்கிரஸ்-ஐஎன்டியுசி குண்டர்களால் கொல்லப்பட்ட எம்.எஸ்.பிரசாத்தின் 41ஆவது தியாக நினைவு தின நிகழ்வை தொடங்கி வைத்து அவர் மேலும் பேசுகையில்,”குருவாயூர் சத்தியாக்கிரகம் (1931 - 1932) மற்றும் பாலி யம் சத்தியாகிரகம் (1947 டிசம்பர் முதல் 1948  மார்ச் வரை - விடுதலைக்குப் பின்னர் நடந்த  முதலாவது ஆலய நுழைவுக்கான போராட்டம்)  போன்றவற்றுக்கு கம்யூனிஸ்ட் தலைவர்கள் தலைமை தாங்கி யதை சுட்டிக்காட்டி னார். உலகெங்கிலும் உள்ள நம்பிக்கை யாளர்கள் சபரிமலை பக்தர்களின் உலக ளாவிய  ஒரு மேடை அமைக்குமாறு திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு கோரிக்கை விடுத்தனர். அவர்கள் அதைப் பரிசீலித்து, நிறைவேற்றுதாகவும் கூறினர். தேவசம்போர்டு நடத்தும் உலகளா விய ஐயப்ப சங்கமத்தை அனுமதிக்கமாட்டோம் என்றும் மாற்று சங்கமத்தை நடத்துவோம் என்றும் ஆர்எஸ்எஸ் கூறுகிறது. ஆனாலும், அனைத்து நம்பிக்கையாள ர்களையும் ஒன்றிணைத்து தேவசம் போர்டு ஏற்பாடு செய்து வரும் சங்கமத்திற்கு அனைத்து சாத்தியமான ஆதரவையும் எல்டிஎப் அரசாங்கமும், சிபிஎம்மும் வழங்கி வருகின்றன. என்எஸ்எஸ் மற்றும் எஸ்என்டிபி உள்ளிட்ட பல்வேறு சமுதாய அமைப்புகளும் தங்கள் முழு ஆதரவையும் அறிவித்துள்ளன. நம்பிக்கையாளர்கள் வகுப்புவாதிகள் அல்ல. வகுப்புவாதிகள் விசுவாசிகளாக இருக்க முடியாது.  நாங்கள் விசுவாசிகளைத் திரட்டி வகுப்பு வாதிகளுக்கு எதிராக மிகவும் வலுவான போராட்டத்தை நடத்துவோம்” என அவர் கூறினார்.