states

img

மணிப்பூரில் மீண்டும் வன்முறை 2 குழந்தைகள் பலி ; 5 மாவட்டங்களில் இணைய சேவை துண்டிப்பு

மணிப்பூரில் மீண்டும் வன்முறை 2 குழந்தைகள் பலி ; 5 மாவட்டங்களில் இணைய சேவை துண்டிப்பு

இம்பால் பாஜக ஆளும் மணிப்பூர் மாநிலத் தில் கடந்த 3 ஆண்டுகளாக வன்முறை (குக்கி - மெய்டெய் இடையேயான மோதல்) நீடித்து வருகிறது. பாஜக ஆட்சி கவிழ்க்கப்பட்டு, குடியரசுத் தலை வர் ஆட்சி அமைத்து, மீண்டும் பாஜக ஆட்சி அமைத்த பின்பும் கூட அம்மாநிலத்தில் வன்முறைச் சம்பவங்கள் கொஞ்சம் கூட குறையவில்லை. இந்நிலையில், திங்களன்று இரவு பிஷ்ணு பூர் மாவட்டத்தின் மொய்ராங் துரோங்லோபி கிராமத்தில் உள்ள குடியிருப்புப் பகுதியில் குக்கி-ஜோ ஆயுதமேந்திய குழுக்கள் குண்டு  வீசித் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படு கிறது. இந்தத் தாக்குதலில் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. உயிரிழந்த குழந்தைகளில் 5 வயது சிறுவன் மற்றும் ஆறு மாத பெண் குழந்தை என மணிப்பூர் மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார். வன்முறை மொய்ராங் துரோங்லோபி கிராமத்தில் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, செவ்வா யன்று காலை உள்ளூர் மக்கள் போராட்டத் தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே இரண்டு எண்ணெய் டேங்கர்கள் மற்றும் ஒரு லாரியை தீயிட்டுக் கொளுத்தினர். மேலும் மொய்ராங் காவல் நிலையத்திற்கு முன்னால் டயர்களை எரித்த போராட்டக்காரர்கள், தற்காலிக புறக்காவல் நிலையத்தையும் சேதப்படுத்தினர். நிலைமை யைக் கட்டுப்படுத்த அப்பகுதியில் பாது காப்புப் படையினர் அதிகளவில் குவிக்கப் பட்டுள்ளனர். பாதுகாப்புப் படையினர் நடத் திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளி யாகியுள்ளன. இணைய சேவை இந்த வன்முறைச் சம்பவங்களைத் தொ டர்ந்து 5 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை முதல் இணையம் மற்றும் மொபைல் சேவை களை தடை செய்து மணிப்பூர் உள்துறை ஆணையர் என். அசோக் குமார் உத்தர விட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில்,”மணிப்பூரின் இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, தௌபால், காக்சிங் மற்றும் பிஷ்ணுபூர் ஆகிய 5 மாவட் டங்களில் நிலவும் சட்டம் ஒழுங்கு சூழ்நிலை யைக் கருத்தில் கொண்டும், தவறான தகவல் கள் மற்றும் வதந்திகள் பரவுவதைத் தடுக்க வும் பிராட்பேண்ட், விசாட், மற்றும் விபிஎன் சேவைகள் உட்பட இணைய சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அரசு முடிவு செய்துள்ளது” என அதில் கூறப்பட்டுள்ளது.