அரசியலமைப்பிற்கு விரோதமாக ஆர்எஸ்எஸ் கூட்டங்களில் பங்கேற்பதா? தமிழக ஆளுநர் அர்லேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!
சென்னை, ஏப். 7 - அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக ஆர்.எஸ்.எஸ். கூட்டங் களில் பங்கேற்கும் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மீது உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும்; தமிழ்நாட்டில் சட்டமன்ற பொதுத் தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் இந்திய தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, டாக்டர் விவேக் ஜோஷி ஆகி யோருக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தின் நகலை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ. ஆறு முக நயினார், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை, திங்களன்று நேரில் சந்தித்து அளித்தார். அக்கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: ஆர்எஸ்எஸ்-காரர்களை சந்தித்து வரும் ஆளுநர் “தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், பாஜக மற்றும் அதன் தேர்தல் வெற்றிக்கு தீவிரமாகப் பணியாற்றி வரும் ஆர்.எஸ்.எஸ் (RSS) அமைப்பைச் சார்ந்த நபர்களைத் தொடர்ச்சி யாகச் சந்தித்து வருவதாக நாங்கள் அறிகிறோம். தற்போது தேர்தல் நடத்தை விதிகள் (Model Code of Conduct) அமலில் உள்ள நிலையில், அவர் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர். ராஜகோபால் (பாஜக), எஸ்.ஜி. சூர்யா (பாஜக), மாருதி (ஆர்.எஸ்.எஸ்), மு. நாச்சியப்பன் (ஆர்.எஸ்.எஸ்), வழக்கறிஞர் சுபாஷ் பாபு (ஏ.பி.வி.எஸ்), தர்மபந்து ஆச்சார்யா சுவாமி (ஆர்.எஸ்.எஸ்) உள்ளிட்ட பலரைச் சந்தித்துள்ளதாகத் தெரிகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பு மேலும், திங்களன்று (ஏப். 6, 2026) கோயம்புத்தூர் செல்லும் ஆளுநர், அங்கு பல்வேறு நிகழ்ச்சி களில் பங்கேற்க உள்ளதாகத் நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத் துள்ளன. குறிப்பாக, ஆர்எஸ்எஸ் ஆதரவு அமைப்பான சுவாமி விவே கானந்தர் சேவா கேந்திராவினால் நிர்வகிக்கப்படும் விவேகானந்தர் ரத்த வங்கி நிகழ்ச்சி, காலை 11:45 மணிக்கு இராமநாதபுரத்தில் உள்ள ஆர்யா வைத்யா பார்மசியில் நடைபெறும் ‘காரியகர்த்தாக்கள்’ சந்திப்பு மற்றும் மாலை 4:00 மணிக்கு ‘சிக்ஷா சமஸ்கிருத உத்தன் நியாஸ்’ (SSU) பேராசிரியர்களுடனான சந்திப்பு ஆகியவற்றில் அவர் கலந்து கொள்ள உள்ளார். சுதந்திரமான தேர்தல் நடைமுறைக்கு எதிரானது மாநிலத்தின் அரசியல் சாசனத் தலைவராக இருப்பவர், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் சூழலில், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் சார்பு அமைப்பு கள் நடத்தும் கூட்டங்களில் பங்கேற்பது என்பது அரசியல் சாசன விழுமியங்களுக்கும், சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல் முறைக்கும் எதிரானது என்று நாங்கள் கவலை தெரி விக்கிறோம். ‘அரசியல் சாசனத்தையும் சட்டத்தையும் பாதுகாப்பேன்’ என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்ட ஒரு ஆளுநர், இத்தகை யச் செயல்களில் ஈடுபடுவது தமி ழகத்தில் தேர்தல் நடைமுறை யைச் சீர்குலைக்கும் செயலாக அமையும். ஒரு குறிப்பிட்ட அர சியல் கட்சிக்கும் அதன் சார்பு அமைப்புகளுக்கும் அவர் ஆதர வளிக்கிறார் என்ற பிம்பத்தை இச்சந்திப்புகள் உருவாக்கு கின்றன. ஜனநாயகம் மீதான மக்களின் நம்பிக்கையை உறுதி செய்க! எனவே, இந்தியத் தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, தகுந்த அறிவுறுத்தல்களையும் உத்தர வுகளையும் வழங்க வேண்டும் என்று கோருகிறோம். தேர்தல் ஜன நாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையைத் தக்கவைக்கவும், நேர்மையான தேர்தல் நடை பெறுவதை உறுதி செய்யவும் தாங்கள் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள் கிறோம். இவ்வாறு கடிதத்தில் குறிப் பிடப்பட்டு உள்ளது.