திரிணாமுல் எம்.பி. கீர்த்தி ஆசாத்
அமித் ஷாவின் மகன் ஐ.சி.சி.யின் தலைவராக இருப்பதால் அவர்கள் பணம் சம்பாதிக்க ஆசிய கோப்பை இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடத்தப்படுகிறது. பாகிஸ்தானுடன் நாங்கள் வர்த்தகப் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் அல்லது எந்த உறவும் வைத்திருக்க மாட்டோம் என்று பிரதமர் கூறியிருந்தார் - பிறகு ஏன் இந்த போட்டி நடத்தப்படுகிறது? பாஜக ஒரு துரோகி என்பதைக் காட்டுகிறது.
சிபிஐ தேசியக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ண பாண்டா
விளையாட்டாக இருந்தாலும் இசையாக இருந்தாலும் அதில் அரசியலை திணிக்கக்கூடாது. பஹல்காம் தாக்குதலுக்கு மக்கள் மனதில் வெறுப்பை உருவாக்கியதும், இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே பதட்டத்தை ஏற்படுத்தியதும், அதிலிருந்து அரசியல் ஆதாயங்களை அறுவடை செய்ய முயன்றதும் பாஜகதான்.
பத்திரிகையாளர் சுஷாந் சிங்
பிரச்சனைகளிலிருந்து மீள்வதற்கான வழியை பிரதமர் சொல்ல வேண்டும் என்று மணிப்பூரும் இந்தியாவும் விரும்பின. அதற்கு பதிலாக அவர்களுக்குக் கிடைத்தது சீழ்பிடித்த காயங்களுக்கு வாய்ச் சொல் மந்திரம் மட்டும் தான்.
காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுப்ரியா
கடந்த எட்டு ஆண்டுகளில் அரசு பல ஜிஎஸ்டி விகிதங்களைப் பயன்படுத்தி மக்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு பைசாவையும் சுரண்டியது. நுகர்வு குறைவதற்கும் கடன் அதிகரிப்பதற்கும் அதிக ஜிஎஸ்டியே காரணம். எட்டு ஆண்டுகளாக மக்கள் ஏன் அதிக வரிகளை செலுத்த வேண்டியிருந்தது?