குருவி மொழியறிந்த குழந்தை
உயிர்ப்போடு இருக்கி றோம் என்பதற்கு நம்மு டைய சிறு மூச்சுக்காற்று ஆதாரமாய் இருக்கிறது.மழை யின் வருகையை ஒரு மழைத்துளி நமக்கு உணர்த்துகிறது.தென்றலின் சுகத்தை ஒரு சிறு வருடல் நம்மை சிலர்க்க வைக்கிறது. அது போல ஹைக்கூ கவிதைகள் 3 வரிகளில் கவிஞன் சொல்ல வருவதை காட்சிப் படுத்தி நம்முள் அழியா பிம்பத்தை பதிவு செய்கிறது. பல மொழிகள் நாம் அறிந்திருந்தா லும் இயற்கையின் மொழியை அறிய தவறி விடுகிறோம். இயற்கையின் மொழியை மழலையாக இருந்தால் மட்டுமே நாம் உணர முடியும்.புத்த கத்தின் தலைப்பே அதற்குச் சான்று. தான் காணும் காட்சிகள் அனை த்தையும் ஹைக்கூ வடிவில் தனது முதல் தொகுப்பில் காட்சிப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர். ஒரு சில ஹைக்கூ கவிதைகள் தங்களின் பார்வைக்கு. அடுக்கி வைத்த புத்தகங்கள் படிக்கத் தேடுகின்றன வாசகர்களை புத்தகங்கள் வாசிக்கப் படாத வரை அவை ஒரு காட்சிப் பொருளாக மட்டுமே அலங்கரிக்கிறது. அதே புத்தகங்கள் நம்மால் வாசிக்கப் பட்டால் சிந்தனையைத் தூண்டும் கருவியாக, தோழனாக, பல பரிமாணங்கள் எடுக்கிறது. அந்த புத்தகத்தின் ஏக்க மாக வாசிப்பு என்ற ஒரு செயல் மறக்கப்பட்டு வருவதை புத்தகத்தின் ஏக்கமாகவே இந்த ஹைக்கூவில் காட்சிப் படுத்தி உள்ளார். ஓடாத கடிகாரம் கடைக்கு சென்றது ஓடுவதற்கு கடிகாரம் கூட ஓட தயாராகிறது என்ற கவிதை ஓடாமல் ஏன் முடங்கி கிடக்கிறீர்கள் என மனித குலத்தை கேட்பது போல் தோன்றுகிறது. வெளுத்த கூலி கையில் போடப்படுகிறது தொட்டுவிடாமல் தீண்டாமை இன்னும் மாற வில்லை என்பதைச் சொல்லும் ஹைக்கூ. தொகுப்பில் இருக்கும் பல ஹைக்கூ கவிதைகள் உங்கள் வாசிப்புக்கு. வசந்தா அவர்களின் முதல் ஹைக்கூ தொகுப்பு “குருவி மொழி யறிந்த குழந்தை”. வயது ஒரு எண் என்பதற்கு எடுத்துக் காட்டு வசந்தா அம்மா. தமுஎகச அறம் கிளை உறுப்பினர். அனைத்து கலை இலக்கிய நிகழ்வுகளிலும் பங்கு கொள்பவர். அவர் மேலும் பல படைப்பு கள் படைத்திட எனது மனமார்ந்த வாழ்த்துகள் குருவி மொழியறிந்த குழந்தை வசந்தா சுவாமிநாதன் வெளியீடு: அன்பு நிலா பதிப்பகம் பக்கம் :64, விலை: 80/-