உ.பி.,யில் துர்க்கை சிலை கரைப்பின் போது கோரச் சம்பவம்
ஆற்றில் மூழ்கி 12 இளைஞர்கள் பலி
லக்னோ உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்திலுள்ள கைராகர் பகுதியில் குசியாப் பூர் கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள உத்தங்கன் ஆற்றில் வியாழக்கிழமை அன்று மாலை துர்க்கை சிலைகள் கரைக்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது, இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் அடங்கிய குழுவினர், சிலையை கரைப்பதற்காக ஆற்றில் இறங்கியுள்ளனர். அவர்களில் ஒருவர் ஆழமான பகுதிக்குச் சென்றபோது திடீரென நீரில் மூழ்கியுள்ளார். அவ ரைக் காப்பாற்ற மேலும் 12 பேர் ஆற்றில் குதித்து தேடினர். ஆனால் நீரோட்ட வேகம் அதிகமாக இருந்த தால் 12 பேரும் நீரில் மூழ்கினர். இந்த கோர விபத்து குறித்து தகவல் அறிந்த தும், உள்ளூர் கிராம மக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். ஆனால் காவல்துறை, தீயணைப்பு வீரர்கள் மிகவும் தாமதமாக வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆற்றில் குதித்த விஷ்ணு என்ற இளைஞர் ஒருவர் மட்டும் உயிருடன் மீட் கப்பட்டு, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார். மற்ற 12 பேர் உயிரி ழந்ததாகவும், அவர்களில் 3 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும், 9 பேரை தேடும் பணி நடைபெற்று வரு வதாக ஆக்ரா மாவட்ட ஆட்சியர் அர விந்த் மல்லப்பா பங்காரி அறிவித் தார். நீரில் மூழ்கி காணாமல் போன 9 பேரும் உயிரோடு இருக்க வாய்ப் பில்லை என பேரிடர் மீட்புக் குழு கூறிய தாக செய்திகள் வெளியாகின
. பாஜக அரசைக் கண்டித்து சாலை மறியல்
உடனடியாக தகவல் அளிக்கப் பட்டும் மீட்புக்குழுவினர் தாமதமாக வந்ததால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஆக்ரா சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட வர்கள் காவல்துறை மற்றும் பாஜக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பின்னர், அதிகாரிகள் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இந்த மறி யலால் ஆக்ரா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.