states

உமர் காலித் ஜாமீன் மனு

உமர் காலித் ஜாமீன் மனு செப்., 22ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

பாஜக, இந்துத்துவா குண் டர்கள் கட்டவிழ்த்துவிட்ட தில்லி வன்முறையில் (சிஏஏ சட்டம்) தொடர்பு இருப்பதாகக் கூறி, தில்லி காவல் துறையால்  ஜேஎன்யு ஆய்வு மாணவர் உமர் காலித், ஷர்ஜீல் இமாம் உள்பட 10 பேர் (செப்., 14 2020) கைது செய்யப்பட்டனர். 10 பேரும் 5 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளனர். இதனை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் 9 பேரும் மேல்முறையீடு (10 பேரில் ஒருவர் முன்பா கவே மேல்முறையீடு) செய்திருந்தனர். கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி உமர் காலித் உட்பட 9 பேரின் ஜாமீன் மனுக்க ளையும் தில்லி உயர்நீதிமன்றம் தள்ளு படி செய்தது.  இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உமர் காலித் உள்ளிட் டோர் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு வெள்ளிக்கிழமை அன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் மன்மோகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அரசு மற்றும் மனுதாரர்கள் வாதத்திற்கு பின்பு ஜாமீன் மீதான அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 22ஆம் தேதிக்கு உச்சநீதிமன்ற நீதிபதி கள் ஒத்திவைத்தனர்.