states

ராஜஸ்தானில் மாணவி தற்கொலை

ராஜஸ்தானில்  மாணவி தற்கொலை

நீட் தேர்வு அச்சம்

நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புக்களுக்கான நீட் தேர்வு  ஞாயிறன்று நடைபெற்றது. பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெற்ற இந்த தேர்வில் சுமார் 10 லட்சத்திறகும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், ராஜஸ்தானில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி ஒரு வர் தற்கொலை செய்து கொண்டார். தமது  பெற்றோருடன் கோட்டாவில் வசித்து வந்த அந்த 17 வயது மாணவி இரவு  9 மணியளவில் தனது தனி அறையில்  தூக்கிட்டு சடலமாக கிடப்பதை கண்டு  அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. காவல்துறை யினர் சம்பவ இடத்திற்கு சென்று மாணவி  உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோத னைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிந்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை செய்துகொண்ட மாணவி மத்தியப் பிரதேசத்தின் ஷியோ பூரைச் சேர்ந்தவர் ஆவார். நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக் கான பயிற்சி மையங்களின் மையப்புள்ளி யாக விளங்கும் கோட்டா நகரில் தேர வுக்கான பயிற்சி பெறும் மாணவர் தற்  கொலை செய்து கொண்டு உயிரி ழப்பது அதிகரித்துள்ளது. இந்த ஆண்  டில் மட்டும் இதுவரை 14 பேர் உயிரி ழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.