இந்தியாவில் உலர் பழங்கள் விலை உயர வாய்ப்பு
அட்டாரி - வாகா எல்லை மூடல்
புதுதில்லி அட்டாரி - வாகா எல்லை மூடல் இந்தியாவில் உலர் பழங்கள் விலை உயர வாய்ப்பு சர்வதேச அளவில் உலர் பழங்க ளுக்கு பெயர் பெற்றது ஆப்கா னிஸ்தான் நாடு ஆகும். குளிர் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப உலர் பழங்க ளில் திராட்சை, அத்தி, ஆப்ரிகாட், கொடி முந்திரி, செர்ரி, மல்பெரி மற்றும் பல உற்பத்தி ஆகின்றன. குறிப்பாக மற்ற நாடுகளை விட ஆப்கானிஸ்தானில் விளையும் உலர் பழங்கள் மிகுந்த சத்து மிக்கவை ஆகும். இதனால் உலகிலேயே ஆப்கானிஸ்தானில் விளையும் உலர் பழங்களுக்கு பெரிய தேவை உள்ளது. இந்நிலையில், பஹல்காம் தாக்கு தலால் அட்டாரி - வாகா எல்லை வழி யாக ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் இந்தியாவுக்கான உலர் பழ வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்திய அர சும் பாகிஸ்தானின் மீது பல கட்டுப்பாடு களை விதித்து வருகிறது. இதில் ஒன்றாக பஞ்சாப்பிலுள்ள அட்டாரி - வாகா எல்லை மூடப்பட்டுள்ளது. இந்த எல்லை வழியாகத்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அந்நாட்டின் உலர் பழங்கள் இறக்குமதி ஆகின்றன. இந்த கட்டுபாடுகள் காரணமாக இந்தியா வில் உலர் பழங்கள் விலை 10 முதல் 25% உயரும் எனக் கருதப்படுகிறது. இதுகுறித்து ஆப்கானிஸ்தானின் உலர் பழச்சந்தை வியாபாரிகள் கூறுகை யில்,“பல ஆண்டுகளாக போர் மற்றும் உள்நாட்டு மோதல்கள் இருந்த போதி லும், இந்தியாவுக்கான உலர் பழ தேவை யின் மிகப்பெரிய ஆதாரமாக ஆப்கா னிஸ்தான் உள்ளது. பஹல்காம் தாக்குத லுக்கு பின் அட்டாரி - வாகா எல்லை மூடப்பட்டது. இதனால், ஆப்கானிஸ்தா னின் காந்தஹாரிலிருந்து உலர் பழங் களை ஏற்றிச் செல்லும் எந்த லாரியும் அட்டாரிக்கு செல்லவில்லை. தற்போது பாகிஸ்தான் தரப்பில், வாகா எல்லையில் சுமார் 200 லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அவை இந்தியாவுக்குள் நுழைய அனு மதிக்கப்படாமல் சிக்கியுள்ளன. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குத லில் உயிர் இழப்பு ஏற்பட்டதோடு மட்டு மல்லாமல், குறிப்பிடத்தக்க நிதி இழப்பு களும் ஏற்பட்டுள்ளன” என அவர்கள் தெரி வித்தனர். கண்ணூர் பூஜை அறையில் கஞ்சா, மெத்தாம்பேட்டமைன் கண்ணூரில் பாஜக பிரமுகர் தப்பி ஓட்டம் கேரள மாநிலம் கண்ணூர் மாவட் டம் திருவங்காட்டில் என்.எம். ரணில் என்ற பாஜக நிர்வாகி யின் வீட்டில் கஞ்சா, டையாக்ஸி மெத் தாம்பேட்டமைன் (எம்டிஎம்ஏ) போதைப் பொருட்களை காவல்துறையினர் சனிக் கிழமை அன்று பறிமுதல் செய்தனர். ரகசிய தகவலின் அடிப்படையில் தலசேரி காவல் ஆய்வாளர் பி.ஏ.பினு மோகன் தலைமையிலான குழுவினர் சனிக்கிழமை அதிகாலை 1.45 மணியள வில் சோதனை நடத்திய போது, பூஜை அறையில் ஒரு பை மற்றும் உறையில் 1.25 கிலோ கஞ்சா மற்றும் 5.9 கிராம் டையாக்ஸி மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருட்களை கண்டுபிடித்தனர். கஞ்சா புகைக்க பயன்படுத்திய காகி தங்கள் மற்றும் அளவிட பயன்படுத்தப் பட்ட தராசு ஆகியவை மீட்கப்பட்டன. கஞ்சா விற்கும் கும்பலின் தலைவர் ரணில் என்று காவல்துறையினர் தெரி வித்தனர். அவரைத் தேடி பலரும் வருகி றார்கள் என்றும் அவர் தொடர்ந்து போதைப்பொருள் பயன்படுத்துவதாக வும் அவரது சகோதரர் காவல்துறை யிடம் வாக்குமூலம் அளித்தார். சோத னைக்கு முன் காவல்துறையினரின் கண்ட தும் ரணில் தப்பி ஓடிவிட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பான விசாரணை யை தீவிரப்படுத்தி, ரணிலையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.