காங்கிரஸ் பொதுச் செயலாளர் சச்சின் பைலட்
சாதிவாரி கணக்கெடுப்பு அரசு திட்டங்களின் நன்மைகள் உண்மையில் அதிகம் தேவைப்படுபவர்களை அடைகின்றனவா என்பதை உறுதி செய்ய சமூகத்தின் ‘எக்ஸ்ரே’ (X-ray) ஆக இருக்கும்.
மக்கள் ஜனநாயக கட்சி எம்எல்ஏ வாஹீத் உர் ரஹ்மான்
பஹல்காம் தாக்குதல் என்பது ஜம்மு-காஷ்மீர் மக்கள் மீதும் ஒரு அவதூறாகும். இந்த தாக்குதலின் நோக்கம் முழு நாட்டிலும் சமூக பிளவை ஏற்படுத்துவதும், நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கச் செய்வது ஆகும். அதனால் காஷ்மீர் மக்கள் எதிரியின் திட்டத்திற்கு இரையாகக் கூடாது. அவர்கள் விரும்புவது நடக்கக்கூடாது என்ற எண்ணத்தில் செயல் பட வேண்டும்.
ஆர்ஜேடி மூத்த தலைவர் சுதாகர்
சரஞ்சித் சிங் சன்னியின் வார்த்தைகளை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். பஹல்காம் தாக்குதலின் குற்றவாளிகளை தண்டிக்க ஒன்றிய அரசின் உதவியற்ற நிலை வெட்கக் கேடானது. தாக்குதலுக்கு எதிராக பிரதமர் மற்றும் பிற பாஜக தலைவர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால், அவர்கள் பதவியை ராஜினாமா செய்வது நல்லது.
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்
விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் திகாயத் மீது தாக்குதல் நடத்தியது மிக மோசமானது ; வன்மையாக கண்டித்தக்கது. ராகேஷ் திகாயத் மீது நடத்தப்பட்ட தாக்குதல், ஒவ்வொரு விவசாயியையும் அவமானப்படுத்துவதாகும்.