states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவர் சஞ்சய் ராவத்

“ஒன்றிய அரசின் அனைத்து திட்டங்களையும் முஸ்லிம்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள் ; ஆனால் பாஜகவுக்கு வாக்களிப்பதில்லை. அந்த துரோகிகளின் வாக்குகள் வேண்டாம்” என கிரிராஜ் சிங் கூறுகிறார். இது உண்மை இல்லை. 2014இல் முஸ்லிம்கள் மோடிக்கு வாக்களித்தார்கள். பீகார், உத்தரப்பிரதேசத்தில் பாஜகவுக்கு வாக்குகள் கிடைத்தன. இப்போது, இந்துக்கள் கூட பாஜகவுக்கு வாக்களிப்பதில்லை. அதனால் வாக்கு திருட்டுகள் அரங்கேறி வருகின்றன.

சமாஜ்வாதி செய்தி தொடர்பாளர் உதய்வீர் சிங்

ஒவ்வொருவரும் தங்கள் விருப்பப்படியே வாக்களிக்கிறார்கள். ஆனால் சமுதாயத்தைப் பிளவுபடுத்தி, சாதி மத அரசியலை செய்ய மட்டுமே பாஜகவினர் ஆசைப்படுகின்றனர். இதன் வெளிப்பாடு தான் கிரிராஜ் சிங்கின் கருத்து ஆகும்.

ஆர்ஜேடி மூத்த தலைவர் ஷமீம் அஹ்மத்

பீகாரில் “இந்தியா” கூட்டணி அரசு அமைந்தால், ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் ; தொழிற்சாலைகளும் நிறுவப்படும். “இந்தியா” கூட்டணி மீதான மக்களின் நம்பிக்கை, பீகார் முன்னேறுவதற்கு உதவும்.

ஜேஎம்எம் செய்தி தொடர்பாளர் மனோஜ் பாண்டே

ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங், “துரோகிகளான முஸ்லிம் வாக்குகள் தேவையில்லை” எனக் கூறியுள்ளார். கிரிராஜ் சிங் வரலாற்றைப் படிக்க வேண்டும்; ஆர்எஸ்எஸ்-ஐ விட பெரிய துரோகி யாரும் இல்லை.