ஷிண்டேவை விமர்சித்ததால் உணவகத்தை சூறையாடிய சிவசேனா குண்டர்கள்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை யின் கார் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் “நயா பாரத்” என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. பிரபல நகைச்சுவை பேச்சாளர் குணால் கம்ரா இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிவசேனா கட்சியை இரண்டாகப் பிரித்து பாஜகவுடன் கூட்டணி வைத்ததை விமர்சித்தும், மகாராஷ்டிரா துணை முதலமைச்சரும், சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டேவை அரசியல் துரோகி எனக் கூறினார். மேலும் “தானேவிலிருந்து (ஷிண்டேவின் சொந்த ஊர்) ஒரு தலைவர்” என்ற பாடலை பாடி, அதனை தனது சமூக வலைதளங்களிலும் பகிர்ந்தார்.
இந்நிலையில், சிவசேனா (ஷிண்டே) கட்சி குண்டர்கள் நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கம் இருக்கும் உணவகத்தை திங்க ளன்று சூறையாடினர். மேலும் குணால் கம்ராவை கைது செய்யுமாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.